SRH vs DC: ஐதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி அபாரம்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

Mar 30, 2025 - 20:11
Mar 30, 2025 - 21:27
 0
SRH vs DC: ஐதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி அபாரம்
டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள்

ஐபிஎல் 2025 தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

டெல்லி அணி அசத்தல்

டாஸ் வென்று முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 18.4 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய கிளாசன் 19 பந்துகளில் 32 ரன்களும், அனிகேத் வர்மா 41 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

Read more: IPL 2025: வெற்றிப்பாதைக்கு திரும்புவது யார்? CSK vs RR இன்று பலப்பரீட்சை!

164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் 16 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது. டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டு பிளெஸ்ஸிஸ் மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் சிறப்பாக விளையாடினர். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய பிளெஸ்ஸிஸ் 27 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 5 பந்துகளில் அதிரடியாக 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow