புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - ரூ.67,000-ஐ தாண்டி விற்பனை
சென்னையில் ஆபரத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.67,000-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் கடந்த வாரம் முதல் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.8,360க்கும், ஒரு சவரன் ரூ.66,680க்கும் விற்பனையானது.
புதிய உச்சத்தில் தங்கம் விலை
இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று (மார்ச் 31) ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் தங்கம் விலை ஒன்று ஒரே நாளில் ரூ.520 உயர்ந்து ரூ.67,400க்கு விற்பனையாகிறது. அதேசமயம் ஒரு கிராம் ரூ.65 உயர்ந்து ரூ.8,425க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Read more: மீண்டும் டெல்லி செல்லும் செங்கோட்டையன்...கலக்கத்தில் அதிமுக தலைமை
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.113க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை அதிகரித்து வருவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






