மீண்டும் டெல்லி செல்லும் செங்கோட்டையன்...கலக்கத்தில் அதிமுக தலைமை
ஒருங்கிணைந்த அதிமுகவை பாஜகவுடன் கூட்டணிக்கு இழுக்க முயற்சி நடைபெற்று வரும் நிலையில், செங்கோட்டையன் இன்று இரவு மீண்டும் டெல்லி பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையே பனிப்போர் நடந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற சட்டப்பேரவை நிகழ்வில் அதிமுக தலைவர்களுடன் செங்கோட்டையன் நெருக்கம் காட்டினார். இதனால் இபிஎஸ் உடனான பனிப்போர் முடிவுக்கு வந்ததாகவும், இருவரும் நன்றாக பேசிவருவதாக கூறப்பட்டது.
செங்கோட்டையன் டெல்லி பயணம்
இதையடுத்து, இபிஎஸ் கடந்த வாரம் சட்டப்பேரவை நிகழ்வுகள் நடக்கும் போதே திடீரென டெல்லிக்கு சென்றார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து பேசிய இபிஎஸ், மக்கள் பிரச்னைகள், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்து பேசியதாக தெரிவித்தார்.
Read more:ரமலான் திருநாள்: உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகளுக்கு...விஜய் வாழ்த்து
இதைத்தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென டெல்லி சென்றார்.அங்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இந்த நிலையில், கே.ஏ.செங்கோட்டையன் இன்று இரவு மீண்டும் டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து திரும்பிய உடன், செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி சென்றார். அங்கு அமித்ஷாவை ரகசியமாக செங்கோட்டையன் சந்தித்து விட்டு மதுரை வழியாக கோபி திரும்பினார்.
பாஜகவுடன் கூட்டணிக்கு இழுக்க முயற்சி
செங்கோட்டையனை முன்னிறுத்தி அதிமுகவில் பாஜக காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளி வரும் நிலையில், கோபியில் இருந்து பெங்களூர் வழியாக செங்கோட்டையன் மீண்டும் டெல்லி பயணம் செய்ய உள்ளார்.
Read more:கரூரில் வேகமாக வெளியேறிய நடிகர் விக்ரம்..காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம்
ஒருங்கிணைந்த அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சி செய்து வரும் நிலையில், கூட்டணியை ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுத்து வருவதால் செங்கோட்டையன் மூலமாக ஒருங்கிணைந்த அதிமுகவை பாஜகவுடன் கூட்டணிக்கு இழுக்க முயற்சி நடைபெற்று வரும் நிலையில், இன்று இரவு மீண்டும் டெல்லி பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
What's Your Reaction?






