பிரதமரின் தனிச் செயலர்.. IFS அதிகாரி நிதி திவாரி நியமனம்!

பிரதமர் மோடியின் தனி செயலராக, இளம் பெண் IFS அதிகாரியான நிதி திவாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதி திவாரி நியமனத்திற்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்து உத்தரவு வெளியிட்டுள்ளது.

Mar 31, 2025 - 19:15
Mar 31, 2025 - 19:17
 0
பிரதமரின் தனிச் செயலர்..  IFS அதிகாரி நிதி திவாரி நியமனம்!
பிரதமரின் தனிச் செயலர்.. IFS அதிகாரி நிதி திவாரி நியமனம்!

பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக இந்திய வெளியுறவுப் பணி (IFS) அதிகாரி நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளார்.  அமைச்சரவையின் நியமனக்குழு நிதி திவாரி நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், பணியாளர் துறை அமைச்சகம் (மார். 29 ) வெளியிட்ட இந்த உத்தரவு வெளியாகியுள்ளது. 

யார் இந்த நிதி திவாரி

உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்தவர் நிதி திவாரி. இவர் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் 96-வது இடத்தைப்பெற்றார். தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு  முதல் பிரதமர் அலுவலகத்தில் உதவிச் செயலராக சேர்ந்தார். பின்னர், 2023 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்று துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். 

நிதி திவாரி வகித்த பொறுப்புகள்

சிவில் சர்வீஸ் பணிக்கு வருவதற்கு முன்பாக வாரணாசியில், வணிக வரித்துறையின் உதவி ஆணையராக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, இந்தியாவின் முக்கியத் துறைகளான வெளியுறவு துறை, ஆயுதக் குறைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு , தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு, அணுசக்தி மற்றும் பாதுகாப்பு துறைகளில் சிறந்து விளங்கியவர். இந்தியா தலைமையேற்று ஜி20 மாநாட்டை நடத்திய போது முக்கியப்பொறுப்புகளை வகித்துள்ளார். 

பிரதமரின் தனிச்செயலர்

பிரதமரின் தனி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிதி தவாரி,  அன்றாட நிர்வாக பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். பிரதமர் மோடியின் அன்றாட நிகழ்ச்சிகள், அதற்கான ஏற்பாடுகள், வெளிநாட்டு பயணங்கள் குறித்த பணிகளில் முக்கிய பங்கு வகிப்பார். நிதி திவாரியின் நியமனத்திற்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து மார்ச் 29 அன்று பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்ட குறிப்பாணையின்படி, அமைச்சரவையின் நியமனக் குழு திவாரியின் நியமனத்தை உடனடியாக அமல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow