post office: சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம்- மீண்டும் கைவிரித்தது அரசு

வைப்பு நிதி (Fixed Deposit), சேமிப்பு நிதி (savings deposit), பொது வருங்கால வைப்பு நிதி (public provident fund) போன்ற சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Mar 29, 2025 - 10:54
 0
post office: சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம்- மீண்டும் கைவிரித்தது அரசு
post office small savings schemes

மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் மார்ச் 28 ஆம் தேதி சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தபால் அலுவலகம் மூலம் நிர்வகிக்கப்படும் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு வருகிற ஏப்ரல் முதல் ஜூன் மாதங்கள் வரையிலான காலாண்டுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்கள் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

வைப்பு நிதி (Fixed Deposit), சேமிப்பு நிதி (savings deposit), பொது வருங்கால வைப்பு நிதி (public provident fund), மூத்தகுடி மக்களுக்கான சேமிப்பு நிதி (senior citizen savings scheme) போன்றவற்றிற்கான வட்டி விகிதங்களில் ஏதேனும் மாற்றம் வரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

வட்டி விகிதங்களில் மாற்றமில்லை:

2025-2026 நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 ஆம் தேதி வரைக்கும் தபால் அலுவலகம் மூலம் நிர்வகிக்கப்படும் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என நிதியமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரையில் வழங்கப்பட்ட வட்டி விகிதங்களே தற்போதும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பல்வேறு வகையிலான சேமிப்புத் திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்கள் முறையே..

  • சேமிப்பு நிதி - 4 %
    1 வருட வைப்பு நிதி- 6.9 %
    2 வருட வைப்பு நிதி- 7 %
    3 வருட வைப்பு நிதி- 7.1 %
    5 வருட வைப்பு நிதி- 7.5 %
    5 வருட தொடர் வைப்புத் தொகை (RD)- 6.7 %
    மூத்த குடிமக்களுக்கான வைப்பு நிதி- 8.2 %
    பொது வருங்கால வைப்பு நிதி- 7.1 %
    சுகன்யா சம்ரிதி கணக்குகள்- 8.2 %
    தேசிய சேமிப்புச் சான்றிதழ் (national savings certificate)- 7.7
    கிசான் விகாஸ் பத்திரம்- 7.5 (115 மாதங்களில் முதிர்ச்சியடையும்)

தபால் அலுவலகம் மூலம் நிர்வகிக்கப்படும் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் கடைசியாக கடந்த ஜனவரி-மார்ச் (2024) காலாண்டில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. ஏப்ரல் 2024 முதல் தற்போது வரை சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமும் கொண்டுவரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more:  தொடர்ந்து 4-வது நாளாக தங்கம் விலை உயர்வு.. இன்றைய நிலவரம்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow