தமிழ்நாடு

RCB வெற்றி பெற்றதால் தாக்குதல்.. விசாரணையில் அம்பலமான உண்மை

ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்ற நிலையில் அதை வைத்து கிண்டல் செய்த  நபர் மீது ஐந்து பேர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RCB வெற்றி பெற்றதால் தாக்குதல்.. விசாரணையில் அம்பலமான உண்மை
ஆர்சிபி வெற்றி பெற்றதால் தாக்குதல்

சென்னை பெருங்குடி மற்றும் வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் கல்லுக்குட்டை திருவள்ளூர் நகரில் மது அருந்திவிட்டு நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்த்துள்ளனர்.

இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்ற நிலையில் சென்னை அணிக்கு ஆதரவாக பேசிய சில நண்பர்களை ஜீவரத்தினம் என்பவர் கிண்டல் செய்துள்ளார். இதனால் ஜீவரத்தினம் மற்றும் அவரது நண்பர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியது.

தாக்குதல்

இதையடுத்து ஆத்திரமடைந்த ஜீவரத்தினம் நண்பர்கள் கீழே கிடந்த கூர்மையான ஆயுதத்தை கொண்டு அவரை பலமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ஜீவரத்தினம் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக துரைப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கல்லு குட்டை பகுதியை சேர்ந்த அப்பு, ஜகதீஷ், ரமேஷ் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிம் மேற்கொண்ட விசாரணையில்  மது போதையில் சென்னை அணி தோல்வியடைந்ததற்கு கிண்டல் செய்ததாகவும், மற்றொரு தவறையும் ஜீவரத்தினம் செய்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக அப்புவின் மனைவியிடம் ஜீவரத்தினம் பழகி வந்ததாகவும் இது குறித்து ஜீவரத்தினத்திடம் கேட்டபோது திமிராக பதில் கூறியதால்  மேலும் பிரச்சனை ஏற்பட்டு தாக்குதல் நடத்தியதாகவும் போலீசாரிடம் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

ஜீவரத்தினத்தை சரமாரியாக தாக்கிய அவரது நண்பர்கள் அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களையும் உடைத்து விட்டு சென்றது  விசாரணையில் தெரிய வந்துள்ளது.