அதிகப்படியான கொலஸ்ட்ராலால் இவ்வளவு பிரச்னையா... உடனே மருத்துவரை பாருங்க!
நம் மனித உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் சேருவதால், ஏராளாமான பிரச்னை ஏற்படுகிறது. பெரும்பாலும் இதய பாதிப்பு முதல் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

கொலஸ்ட்ரால் என்பது நம் உடலில் அனைத்து செல்களிலும் இருக்கும் ஒருவகை கொழுப்பு பொருளாகும். இது ஹார்மோன்களை உருவாக்கவும், புதிய செல்களை உருவாக்கவும் பயன்படுகிறது. இருப்பினும் அதிகப்படியான கொலஸ்ட்ரால் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அச்சுறுத்துவதால், இதயம் பலவீனமாக மாறுகிறது. கொலஸ்ட்ரால் அதிகரிப்பு, இதயம் முதல் சிறுநீரகம் வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மருத்துவர்கள் எச்சரிக்கை
கொலஸ்ட்ரால் இதயத்தை மிகவும் பலவீனப்படுத்தும். சில உணவுகள் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை வேகமாக அதிகரிக்கச் செய்வதால் உணவுகளில் கவனம் செலுத்துவது சிறந்ததாக அமைகிறது. தற்போதைய காலகட்டத்தில் கொலஸ்ட்ரால் பிரச்னையால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 30 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு அதிக அளவு கொலஸ்ட்ரால் அறிகுறிகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கொலஸ்ட்ரால் அதிகரிப்பால் கால் மற்றும் விரல்களில் தோன்றும் அறிகுறிகள் பற்றி காணலாம்.
மரபணு பிரச்னைகள்
உடலில் சேரும் அதிக அளவிலான கொலஸ்ட்ராலின் தாக்கங்களை அறிந்து கொண்டு மருத்துவர்களை அணுகி உரிய முறையில் சிகிச்சை பெறுவது நன்மை பயக்கும். அதிக அளவிலான கொலஸ்ட்ரால் ஆண்களை பெரும்பாலும் தாக்குவதாக கூறப்படுகிறது. ஆண்களுக்கு கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் எல்டிஎல் (LDL- low density lipoprotein) ஒருவரின் ஒட்டுமொத்த வாழ்வின் ஆரோக்கியத்தை பாதிப்பதாக கூறப்படுகிறது.
அதிக அளவிலான கொழுப்பு இதயத்திற்கு பல்வேறு பாதிப்புகளை தருகிறது. கொலஸ்ட்ரால் உயர்வதால் தமனிகளில் பிளேக் கட்டமைப்பை உருவாக்க வழி வகுக்கிறது. இது ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தி கடுமையான உடல்நல பிரச்சனையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஆண்களுக்கு, அவர்களது வாழ்க்கை முறை மரபணுக்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கெட்ட கொழுப்பின் அறிகுறி
அதிக கொலஸ்ட்ரால்களின் முதல் அறிகுறியாக கை, கால்கள் மரத்து போய் உணர்வு இல்லாமல் உள்ளதாக கூறப்படுகிறது குறிப்பாக இரவில் தூங்கும் பொழுது கொலஸ்ட்ரால் தமனிகளில் ரத்த சுழற்சியை பாதித்து, நரம்பு தளர்ச்சிக்கு வடிவமைக்கிறது. உடலில் உள்ள மற்ற உறுப்புகள் சூடாக இருக்கும் பொழுது கை, கால்கள் மட்டும் குளிர்ச்சியாக இருந்தால், அது கெட்ட கொழுப்பின் அறிகுறியாக உள்ளது. இதனால் சருமத்தில் வீக்கம் மற்றும் நிறமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.
கை கால்களை தொடர்ந்து அசைக்க முடியாமலும். சதைப்பிடிப்பு மற்றும் வீக்கம் போன்றவை அறிகுறிகளாக உள்ளது. முக்கியமாக ரத்த ஓட்டம் இல்லாததாலும் இது நடைபெறுகிறது. இவ்வாறான அறிகுறிகளை கண்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்த வழியாக கூறப்படுகிறது. இல்லையெனில் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?






