பா.ஜ.கவோடு கூட்டணி என்று சொல்ல நான் என்ன கிறுக்கனா? திண்டுக்கல் சீனிவாசன் 

இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா என்று ஆர்.பி. உதயகுமார் காலை காணொளி வெளியிட்டது குறித்த கேள்விக்கு, இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில் அளித்தார்.

Mar 27, 2025 - 14:58
Mar 27, 2025 - 15:41
 0
பா.ஜ.கவோடு கூட்டணி என்று சொல்ல நான் என்ன கிறுக்கனா? திண்டுக்கல் சீனிவாசன் 
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
பா.ஜ.கவோடு கூட்டணி என்று சொல்ல நான் என்ன கிறுக்கனா? திண்டுக்கல் சீனிவாசன் 

கடந்த மார்ச் 25ம் தேதி அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். அவரைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் டெல்லி சென்றனர்.

அன்றைய சட்டமன்றக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  “தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருப்பதாக தகவல் வருகிறது. அவர் அங்கு யாரை சந்திக்க உள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இந்த சந்திப்பின் போது மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதி, இருமொழிக் கொள்கை, மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு உள்ளிட்டவை குறித்து பேசி தமிழ்நாட்டின் நலனை ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி

இதைத்தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக அலுவலகத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தேன். ஆகையால் நேரில் வந்து பார்வையிட வந்துள்ளதாக தெரிவித்தார்.பின்னர் டெல்லியில் இரவு 8 மணி அளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் எம்.பி, தம்பிதுரை எம்.பி., ஆகியோர் சந்தித்து பேசினர். 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக பேசப்பட்டதாக தகவல் வெளியானது. 

Read more: விபத்தில் சிக்கிய ஐஸ்வர்யா ராய் கார்.. ஷாக்கான ரசிகர்கள்

இதனிடையே அமித்ஷா X தளத்தில் பதிவிட்டுள்ள ஒரு பதிவில், 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் என தமிழிலும், இந்தியிலும் பதிவிட்டிருந்தார். இதனால் தமிழக அரசியல் களம் இன்னும் பரபரப்பானது. 2026-ல் தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி அச்சாரமாக இந்த சந்திப்பு நடந்துள்ளதாக அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி சந்திப்பு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாஜகவோடு கூட்டணி என்று கூறுவதற்கு நான் என்ன கிறுக்கனா

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அளித்துள்ள பேட்டியில், கூட்டணி குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்வார். பாஜகவோடு கூட்டணி என்று நான் யாரிடமும் கூறவில்லை. பாமக சட்டமன்ற உறுப்பினர் இதுகுறித்து பேசினால், அவரிடமே இது குறித்து கேளுங்கள். நான் எதற்கும் பயப்பட மாட்டேன். பாஜகவோடு கூட்டணி என்று கூறுவதற்கு நான் என்ன கிறுக்கனா என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா என்று ஆர்.பி. உதயகுமார் காலையில் காணொளி வெளியிட்டது குறித்த கேள்விக்கு, இதுகுறித்தும் எனக்கு எதுவும் தெரியாது என பதில் அளித்தார்.

Read more: குணால் கம்ரா விவகாரம்.. சிவசேனா ஆதரவாளர்கள் செய்த பகீர் செயல்

மேலும், எடப்பாடி பழனிசாமி உடன் சந்திப்பு முடிந்ததும் தேசிய ஜனநாயக கூட்டணி தான் அமையும் என அமித்ஷா சமூக வலைதள பதிவிட்டாரே என்ற செய்தியாளரின் கேள்விக்கு, ”அதற்கு என்னையே என்ன செய்ய சொல்லுறீங்க? என பதில் அளித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow