விபத்தில் சிக்கிய ஐஸ்வர்யா ராய் கார்.. ஷாக்கான ரசிகர்கள்
நடிகை ஐஸ்வர்யா ராயின் கார் விபத்தில் சிக்கிய செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக அழகி பட்டம் பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராய் ‘இருவர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து, 'ஜீன்ஸ்’, ‘எந்திரன்’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’, ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் நடிப்பு ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
நடிகை ஐஸ்வர்யா ராய், ஹிந்தி, மராத்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற ஒரு மகளும் உள்ளனர். சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை பிரிந்து வாழ்த்து வருவதாக தகவல் பரவியது.
கார் விபத்து
பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது குடும்பத்துடன் மும்பையில் உள்ள ஜுகு பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் வீட்டின் அருகே அவரது கார் விபத்தில் சிக்கிய செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் சென்று கொண்டிருந்த ஐஸ்வர்யா ராய் கார் மீது பின்னால் வந்த மாநகர பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தின் போது அதிர்ஷ்டவசமாக ஐஸ்வர்யா ராய் காரில் இல்லை என்றும் விபத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் ரசிகர்கள், ஐஸ்வர்யா ராயை பாதுகாப்பாக இருக்கும் படி கமெண்ட் செய்து வருகின்றனர்.
நடந்தது என்ன?
இந்த சம்பவம் குறித்து ஜுகு போலீஸார் கூறியதாவது, “பின்புறம் வந்த மாநகர பேருந்து ஹாரன் அடித்து கொண்டிருந்ததால் ஐஸ்வர்யா ராயின் கார் ஓட்டுநர் காரில் இருந்து இறங்கி ‘ஏன் ஹாரன்’ அடிக்கிறாய் என்று கேட்டார். மற்றபடி அப்பகுதியில் எந்த விபத்தும் ஏற்படவில்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும், சாலையில் ஏற்பட்ட சிறிது நேர குழப்பத்திற்கு பின் ஐஸ்வர்யா ராய் கார் புறப்பட்டு சென்றது.
What's Your Reaction?






