சின்னத்திரை சீரியல்கள் மற்றும் 'இந்தியன் 2' போன்ற திரைப்படங்களில் துணை நடிகையாகப் பணியாற்றி வரும் ஞானலீலா, சமீபத்தில் தான் இயக்கிய 'கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை' குறும்படம் மூலம் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்தவர். இந்நிலையில், தனக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபரைத் தேடிச் சென்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திட்டம் போட்டுப் பிடித்த நடிகை
நடிகை ஞானலீலாவிற்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி, கெட்ட வார்த்தைகளால் பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடிகை, அந்த நபரிடம் நட்பாகப் பழகுவது போல மெசேஜ் செய்து, அவர் அசோக் நகரில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் வேலை பார்ப்பதை ரகசியமாகக் கண்டறிந்துள்ளார். அந்த நபர் திருமணமானவர் என்பதும், குடும்பத்துடன் வசித்து வருவதும் தெரியவந்தது.
உணவகத்திற்கே சென்று தர்மஅடி
தகவல் உறுதியானதும், நடிகை ஞானலீலா தனது கணவர் மணிவண்ணனுடன் நேரடியாக அந்த உணவகத்திற்குச் சென்றார். அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த அந்த நபரைச் சட்டையைப் பிடித்து வெளியே இழுத்து வந்து, நடுரோட்டில் வைத்துச் சரமாரியாகக் கேள்வி கேட்டுள்ளார். "மனைவி, குழந்தையுடன் வாழும் நீ, சமூக வலைதளத்தில் ஒரு பெண்ணை இப்படித்தான் ஆபாசமாகப் பேசுவாயா?" எனக் கோபத்துடன் கேட்டதுடன், அந்த நபரைத் தாக்கியும் உள்ளார். இந்தத் திடீர் மோதலால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறையினர் விசாரணை
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அசோக் நகர் காவல்துறையினர், அந்த நபரை மீட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். நடிகை ஞானலீலா இந்த மொத்தச் சம்பவத்தையும் வீடியோவாக எடுத்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், பெண்களுக்கு எதிராக அத்துமீறுபவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார். நடிகை தாக்கியதில் அந்த நபருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், தவறு செய்த அந்த நபர் இதுவரை நடிகைக்கு எதிராக எந்தப் புகாரும் அளிக்கவில்லை என்பதால், காவல்துறையினர் அவரை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். தேவைப்பட்டால் விசாரணைக்கு அழைப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

LIVE 24 X 7