அதிமுக ஏன் நாடகம் நடத்துகிறது?- முத்தரசன் கேள்வி
மன்னராட்சி என்று சொன்னால் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி இருக்க முடியாது. அதை புரிந்து கொள்ள வேண்டும். மன்னராட்சியில் பிற கட்சிகளுக்கு வேலை கிடையாது.

தருமபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கு மத்திய அரசு அதற்குண்டான தொகையை வழங்காததால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வரும் 1ந் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட ஒன்றிய தலைநகரங்களில் விவசாயத் தொழிலாளர்களுடைய போராட்டம் தீவிரமாக நடைபெற உள்ளது.
தமிழக மாணவர்கள் பாதிப்பு
மத்திய அரசு கல்விக்குரிய தொகை 2,152 கோடியை தர மறுக்கிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் மட்டுமே நிதி கொடுப்பேன் என மத்திய கல்வி அமைச்சர் கூறியிருப்பது ஜனநாயகம் அல்ல. தமிழக அரசை மத்திய அரசு கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்க கூடாது. தேசிய கல்விக் கொள்கையில் மொழி பிரச்னை மட்டுமல்ல, தேர்வு முறையால் தமிழக மாணவர்களை கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கல்வித் தொகையை வழங்காமல் மாணவர்களையும், ஆசிரியர்களையும் வஞ்சிப்பது கண்டனத்திற்குறியதாகும்.
Read more: கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும் – அண்ணாமலை
இயற்கை சீற்றத்தால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மனித உயிர்கள் பாதிக்கப்பட்டது. வீடுகள் சேதமடைந்தது. கால்நடைகள் மடிந்து போயின. அரசு திட்டங்கள் சீர் குழைந்து போனது. இதற்காக தான் தமிழக அரசு 37 ஆயிரம் கோடி நிதி கேட்டது. ஆனால் இதுவரை ஒரு பைசா கூட மத்திய அரசு கொடுக்கவில்லை. பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றியே தீர்வோம் என அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
இபிஎஸ் தெரியப்படுத்த வேண்டும்
அடுத்தடுத்த கலகங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை கூறுகிறார். இது நாட்டு மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. சுங்கச்சாவடி கட்டணம் ரத்து செய்ய வேண்டும். ரிசர்வ் வங்கி பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருகிறது அது சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும். கார்ப்பரேட் நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி கடன் பெற்று கட்டாமல் நிலுவையில் உள்ளது. நாட்டில் 16 லட்சம் கோடி வாரா கடனாக உள்ளது. இதைப் பற்றி மத்திய அரசு கவலைப்படாமல் சாதாரண மக்களுக்கு எதிராக ரிசர்வ் பேங்க் நடவடிக்கை எடுத்துள்ளது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டு பிரச்னைக்காக மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாக இபிஎஸ் கூறுவது மகிழ்ச்சி. தமிழ்நாட்டில் ஒன்பது பிரச்னைகள் இருக்கிறது. இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினாரா? அதற்கு அமித்ஷா என்ன பதில் சொன்னார் என்பதை எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக தெரியப்படுத்த வேண்டும்.
மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்
2026 இல் திமுக ஆட்சியை அகற்றி தேசிய ஜனநாயகக்கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா கூறுவது, அதிமுகவின் முக்கியமான நிர்வாகி செங்கோட்டையன் அமைச்சவை சந்தித்தது இதன் பொருள் என்ன.. ஏன் இப்படி ஒளிந்து மறைந்து அரசியல் செய்ய வேண்டும். அரசியல் என்பது வெளிப்படையாக இருக்க வேண்டும். அதிமுக ஏன் நாடகம் நடத்துகிறது என்ற கேள்வி முன் வைக்கிறேன். 2026 மார்ச் 31க்குள் நாட்டில் நக்சலைட் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர்கள் அறிவிக்கிறார்.
Read more: செங்கோட்டையனுக்கு Y + பாதுகாப்பு - மத்திய அரசு பரிசீலனை !
நக்சலைட் பாதையை இந்திய கம்யூனிஸ்ட் நிராகரிக்கிறது. ஆதரிக்கவில்லை ஆனால் நக்சலைட்களை சுட்டுக்கொள்வது மனிதாபமானமற்ற நடவடிக்கை. இந்த நடவடிக்கையை மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். உள்ளாட்சி பணியாளர்கள், டாஸ்மாக் பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யபட வேண்டும். அரசுத் துறையில் காலி பணியிடங்களுக்கு ஓய்வு பெற்றவர்களை நியமிக்கிறார்கள். அரசுத்துறையே இவ்வாறு இருந்தால் தனியார் துறை எவ்வாறு இருக்கும். திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த பத்திரிக்கையாளர் தாக்குதல் என்பது பத்திரிக்கையாளர்கள் பணி சமூகப் பணி, பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜய்க்கு பதில்
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகமாக தேவைப்படுகிறது. என்கவுண்டர் என்பது தவிர்க்கப்பட வேண்டும். இதனால் உளவுத்துறை கண்காணிப்பு இன்னும் அதிகப்படுத்த வேண்டும். தவெக விஜய், திமுகவுக்கும் தான் போட்டி என கூறி இருப்பது அவருக்கு கட்சி குறித்து கருத்து சொல்ல உரிமை உள்ளது.
கனவு காண்பதற்கு உரிமை உள்ளது. அரசியல் என்றால் நேர்மை எளிமை தியாகம் இருக்க வேண்டும் இப்பொழுது அது தேவையில்லை. ஒரு நாள் கூட ஜெயிலுக்கு போகாமல் முதலமைச்சர் ஆகலாம் ஜனநாயகம் இது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடுகிறதா இல்லையா என்று தீர்மானிக்கின்ற அதிகாரம் விஜய்க்கு கிடையாது. நாங்கள் அமைதியாக இருக்கிறோம். விஜய் களத்தில் இறங்கி போராட்டம் செய்து காலவரையற்று உண்ணாவிரதம் இருந்து பல்வேறு போராட்டங்கள் மேற்கொண்டு தியாகங்களுக்கு தயாராக இருக்கிறார். என்னுடைய போராட்டங்கள் குறித்து பொதுமக்கள் நன்கு அறிவார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இன்னொரு அரசியல் கட்சி நற்சான்றிதழ் தர வேண்டிய அவசியம் இல்லை.
ஏவல் துறையாக அமலாக்கத்துறை
மன்னராட்சி என்று சொன்னால் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி இருக்க முடியாது. அதை புரிந்து கொள்ள வேண்டும். மன்னராட்சியில் பிற கட்சிகளுக்கு வேலை கிடையாது. மன்னர் மட்டும்தான் ஆட்சியில் இருப்பார். புரிதல் இல்லாமல் திரைப்படத்தில் வசனம் பேசுவது போல் அரசியலில் பேச முடியாது. ஆயிரம் கோடி ஊழல் என கூறிய அமலாக்கத்துறையை பார்த்து உயர்நீதிமன்றம் பொய் சொல்லாதே என்று நீதிமன்றம் கூறுகிறது. அதை நான் கூறவில்லை. ஊழல் நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிலும் ஊழல் நடைபெறக்கூடாது அவ்வாறு நடந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமலாக்கத்துறை நேர்மையாக செயல்படவில்லை. மத்திய அரசின் ஏவல் துறையாக அமலாக்கத்துறை செயல்படுகிறது என தெரிவித்தார்.
What's Your Reaction?






