நீச்சல் கற்றுக்கொடுக்க சென்ற இடத்தில் தந்தை, மகனுக்கு நேர்ந்த சோகம்

முனிரத்னம் குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், இருவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Mar 30, 2025 - 16:58
Mar 30, 2025 - 18:50
 0
நீச்சல் கற்றுக்கொடுக்க சென்ற இடத்தில் தந்தை, மகனுக்கு நேர்ந்த சோகம்
தந்தை மகன் உயிரிழந்த நீர் சேமிப்பு குட்டை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த நஞ்சாபுரம் கிராமத்தை சேர்ந்த கட்டிட கூலி தொழிலாளி முனிரத்னம்(32). இவர் இரு மகன்களான 6ம் வகுப்பு படிக்கும் சந்தோஷ்குமார்(11), கலைச்செல்வன் ஆகியோருக்கு அருகே உள்ள தொட்டூர் என்னும் கிராமத்தில் வெங்கடேசப்பா என்பவருக்கு சொந்தமான விவசாய நீர் சேமிப்பு குட்டையில் நீச்சல் கற்றுக்கொடுக்க சென்றுள்ளார்.

நீச்சல் பயிற்சி

அப்போது முனிரத்னம் மற்றும் மூத்த மகன் சந்தோஷ் குமார் ஆகிய இருவரும் நீரில் மூழ்கிய நிலையில் அருகே இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இருவரும் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

Read more: திருப்பூருக்கு பிரதமர் மோடி பாராட்டு 

முனிரத்னம் குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், இருவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிராம  மக்கள் சோகம்

ஒசூர் பகுதிகளில் யுகாதி பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில் தந்தை,  மகன் இருவரும் தண்ணீர் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow