திருப்பூருக்கு பிரதமர் மோடி பாராட்டு
கோடைக்கால விடுமுறையில் மாணவர்கள் தங்களுடைய திறனை மெருகேற்றிக்கொள்ள வேண்டும்.புதிய பொழுதுபோக்கை கற்று கொள்வதற்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இதன்படி, மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 120வது மனதின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பூர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளின் பணிகள் குறித்து பிரதமர் மோடி பேசினார்.
திருப்பூருக்கு பாராட்டு
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, உலகளவில் அதிக ஜவுளிக்கழிவுகளை உருவாக்கும் மூன்றாவது நாடு இந்தியா. ஜவுளிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதில் இந்தியா முன்னேறி வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் சாய ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், சுத்திகரிப்பு ஆலைகளில் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதனால் சுத்திகரிக்கப்பட்ட நீர், நொய்யல் ஆற்றில் கலக்கப்படுகிறது என தெரிவித்தார்.
Read more: RCB வெற்றி பெற்றதால் தாக்குதல்.. விசாரணையில் அம்பலமான உண்மை
மேலும், திருப்பூரில் சுத்திகரிக்கும் பணியும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி பணிகளும் பாராட்டப்பட வேண்டியவை என்று கூறினார்.தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, கோடைக்காலங்களில் நீர் சேமிப்பு என்பது மிகவும் அவசியமானது. கோடைக்கால விடுமுறையில் தன்னார்வ சேவைகளில் மாணவ, மாணவிகள் ஈடுபடும் நிகழ்ச்சிகளை பள்ளிகள், சேவை அமைப்புகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
மேலும், கோடைக்கால விடுமுறையில் மாணவர்கள் தங்களுடைய திறனை மெருகேற்றிக்கொள்ள வேண்டும்.புதிய பொழுதுபோக்கை கற்று கொள்வதற்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
What's Your Reaction?






