பண்ணாரி மாரியம்மன் கோயில் 'குண்டம்' திருவிழா இன்று தொடக்கம்!
லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தும் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

தமிழகத்தில் அம்மன் திருத்தலங்களில் மிகவும் பிரசித்திப்பெற்ற தலமாக விளங்கும் பண்ணாரி மாரியம்மன் கோயில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறும்.
இதில் எந்த கோயிலிலும் இல்லாத வகையில் அதிகாலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்துவர். இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று இரவு கோயில் வளாகத்தில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா ஏப்ரல் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
முன்னதாக திருவிழாவை முன்னிட்டு கோயிலில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read more:-
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர மாசி மாத பிரம்மோற்சவம் கோலாகலம்!
What's Your Reaction?






