காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர மாசி மாத பிரம்மோற்சவம் கோலாகலம்!
சக்தி தலங்களில் ஒட்டியான பீட ஸ்தலமாக விளங்கும் முதன்மை ஸ்தலமான உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வருடாந்திர மாசி மாத பிரம்மோற்சவம் நிறைவடைந்து விடையாற்றி உற்சவம் நடைபெற்றது.

உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோவிலில் மாசி பிரம்மோற்ச்சவம் முடிவுற்று விடையாற்றி உற்ச்சவத்தின் நிறைவாக நடைபெற்ற புஷ்ப பல்லக்கு உற்சவம் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் சார்பில் நடைபெற்ற உற்ச்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
புஷ்ப பல்லக்கு வீதி உலாவின் போது காமாட்சி அம்மனை ரோஜா பூ, மல்லிகை பூ,பன்னீருடன் வரவேற்ற முஸ்லீம் சமுதாயத்தினர்-முஸ்லீம் சமுதாயத்தினருக்குமாலை மரியாதை செலுத்திய ஸ்தானீகர்கள், மத நல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில் இரு சமுதாயத்தினரின் செயலை பொதுமக்கள் கண்டு வியந்தனர்.
சக்தி பீடங்களில் ஒன்றானதும், ஒட்டியான பீடமாக விளங்கும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் மாசி பிரம்மோற்சவம் கடந்த 3-ம் தேதி முதல் தொடங்கி 13-ந்தேதி வரை நடைபெற்று முடிந்தது.
மாசி மாதம் பிரம்மோற்சவம் நிறைவடைந்ததை ஒட்டி காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் விடையாற்றி உற்சவம் நாள்தோறும் கோவில் வளாகத்தில் நடைபெற்று வந்தது. விடையாற்றி உற்சவத்தின் கடைசி நாள் உற்சவமான பூப்பல்லக்கு வீதி உலா உற்சவம் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினரால் இன்று வெகு விமர்சையாக நடத்தப்பட்டது.
அதன்படி விடையாற்றி உற்சவத்தின் கடைசி நாளான இன்று தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் ஏற்பாட்டின் பேரில் மல்லிகைப்பூ, மனோரஞ்சித பூ,செண்பகப்பூ, சாமந்திப்பூ, துளசி,சம்பங்கி, தவணம், உள்ளிட்ட பல்வேறு வண்ண வண்ண மலர்களாலும், பச்சை கிளி பொம்மையாலும் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் காஞ்சி காமாட்சி அம்மன் தங்க நிற பட்டு உடுத்தி, வைர வைடூரிய ஆபரணங்கள் அணிந்து, பச்சை நிற மனோரஞ்சிதம் பூ, செண்பகப்பூ, மல்லிகைப்பூ மலர் மாலைகள் சூடி லட்சுமி சரஸ்வதி தேவிகளுடன், பூ பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தவாறு, மேள வாத்தியங்கள் முழங்க, வான வேடிக்கைகள் வெடிக்க காஞ்சி நகரின் 4 ராஜ வீதிகளில் வலம் வந்தார்.
விடையாற்றி உற்சவத்தின் கடைசி நாளான நேற்று பூப்பல்லக்கில் உலா வந்து காட்சி அளித்த காஞ்சி காமாட்சி அம்மனை பெரிய காஞ்சிபுரம் தர்காவை சேர்ந்த முஸ்லிம் பெருமக்கள் ரோஜா பூ மல்லிகைப்பூ பன்னீர் முன்னிட்டு சீர்வரிசையாக கொண்டு வந்து காமாட்சி அம்மனுக்கு அளித்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பூஜை செய்து வணங்கினார்கள்.
சீர்வரிசை கொண்டு வந்த முஸ்லிம் பெரு மக்களுக்கு கோவில் ஸ்தானிகர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.மத நல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில் நடைபெற்ற இரு மதத்தினரின் செயல் கூடியிருந்த பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியும் நிகழ்ச்சியையும் ஏற்படுத்தியது. பூப்பல்லக்கில் வீதி உலா வந்த காஞ்சி காமாட்சி அம்மனை வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து காத்திருந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
What's Your Reaction?






