போர் இன்னும் முடியவில்லை.. சீமான் ஃபிலிம் காட்டிக்கொண்டிருக்கிறார்.. நடிகை புகார்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு அழைத்தால் மொத்த கட்சிக்காரர்களையும் அழைத்து வந்து ஃபிலிம் காட்டிக்கொண்டிருக்கிறார் என்று நடிகை குற்றம்சாட்டியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பாக 12 வார காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 27-ம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராக வேண்டிய நிலையில் அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து பல பிரச்சனைகளுக்கு பிறகு பிப்ரவரி 28-ஆம் தேதி சீமான் காவல்நிலையத்தில் ஆஜரானார். இதனிடையே, நடிகை பாலியல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து சீமான் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, 12 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கு மீண்டும் தொடரப்பட்டுள்ளது.
புதிய அரசு பொறுப்பேற்றதையடுத்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே 12 வாரங்களில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து சீமானுக்கு எதிராக நடிகை தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது தன்னை பற்றி அவதூறாக பேசி கொண்டிருப்பவர்கள் அனைவர் மீதும் மானநஷ்ட வழக்கு தொடர உள்ளதாக நடிகை வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், “சீமானுக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு நான் சொல்லவது என்னவென்றால் இந்த போர் இன்னும் முடியவில்லை. என்னை பற்றி அவதூறாக பேசி கொண்டிருப்பவர்கள் அனைவர் மீதும் மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன். பெரிய தொகையை மான நஷ்ட ஈடாக தரவேண்டும். அனைவரும் தயாராக இருங்கள்.
சீமான் ஆம்பளையே இல்லை. விசாரணைக்கு அழைத்தால் மொத்த கட்சிக்காரர்களையும் அழைத்து வந்து ஃபிலிம் காட்டிக்கொண்டிருக்கிறார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது சீமான் திணறப்போவதை அனைவரும் பார்க்க உள்ளனர்" என்று கூறினார்.
What's Your Reaction?






