DC vs SRH: ஐபிஎல் 10வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதரபாத் இன்று மோதல்!
ஐபிஎல் 18 வது சீசனில் 10 லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர். இரண்டு அணிகளும் தங்களுடைய 2-வது வெற்றிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் 18-வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று 10 லீக் போட்டியை எட்டியுள்ளது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியும் மோதும் போட்டி, இன்று 3.30 மணிக்கு விசாகப்பட்டினத்திலுள்ள ACA-VDCA கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
SRH வெற்றிக்கு திரும்புமா?
18 வது சீசனில் முதல் போட்டியில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி அபாரமாக விளையாடி 20 ஓவரில் விக்கெட் இழப்பிற்கு 286 ரன்களை குவித்து ராஜஸ்தான் ராயல் அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து லக்னோ அணியுடனான போடியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில், இன்று டெல்லி அணியுடனான போட்டியில் வெற்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு தொடரும் நோக்கில் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அணிக்கு திரும்பிய கே.எல். ராகுல்
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் லக்னோ அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள நிலையில், அப்போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. டெல்லி அணியின் வீரர் கே.எல் ராகுலுக்கு குழந்தை பிறந்துள்ளதால், அவர் முதல் போட்டியில் கே.எல் ராகுல் விளையாடவில்லை. இந்நிலையில் இன்றையப் போட்டியில் விளையாட உள்ளது டெல்லி அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
சன்ரைசர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய 2 அணிகளும் இதுவரை 24 போட்டிகளில் விளையாடியுள்ளனர். இதில் சன்ரைசர்ஸ் ஐதரபாத்13 போட்டிகளிலும், டெல்லி கேப்பிடல்ஸ் 11 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இதில், அதிகபட்சமாக சன்ரைசர்ஸ் 266 ரன்களும், டெல்லி 207 ரன்களும் எடுத்துள்ளது.
புள்ளிப்பட்டியல் கடைசி இடம்
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்த நிலையில், ரன் ரேட் அடிப்படையில் 3-வது இடத்தை பிடித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியதால், புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது.
What's Your Reaction?






