IPL 2025: வெற்றிப்பாதைக்கு திரும்புவது யார்? CSK vs RR இன்று பலப்பரீட்சை!
கவுகாத்தியில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் மோதுகின்றன.

ஐபிஎல் 2025 18 வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 11 வது லீக் போட்டி இன்று கவுகாத்தியில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோல்வியை தழுவிய நிலையில், இன்றைய போட்டி சென்னை ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிஎஸ்கே 8-வது இடத்தில், ராஜஸ்தான் 10-வது இடத்தில் உள்ளது. நடப்பு சீசனில் முதல் 2 போட்டியிலும் ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவிய நிலையில், தங்களுடைய முதல் வெற்றிக்காக தீவிரப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
8வது இடத்தில் சிஎஸ்கே
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது. தொடர்ந்து 2வது போட்டியில், ஆர்சிபி அணியிடம் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சிஎஸ்கே அதனுடைய ஹோம் கிரவுண்டான சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபியிடம் தோல்வியை தழுவியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்த தோல்வியின் மூலம் புள்ளிப்பட்டியல் எட்டாவது இடத்தில் உள்ள சென்னை அணிக்கு இப்போட்டி முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது.
முதல் வெற்றிக்கு போராடும் RR
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியுடன் தோல்வியை தழுவியது. 2-வது போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியடைந்தது. இந்நிலையில், இப்போட்டியில் வெற்றிப்பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் ராஜஸ்தான் அணி உள்ளது. இந்த இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றிபெற்று, வெற்றிப் பாதைக்கு யார் திரும்பவது என்ற போட்டி நிலவுதால், இன்றைய போட்டி மிகவும் சுவாரசியமாகவும், பரபரப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் லைன் அப் கடுமையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இன்றைய போட்டியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பரஇன்று இரவு 7.30 தொடங்கும் இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியிலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும் நேரலையில் காணலாம்.
Read More:
DC vs SRH: ஐபிஎல் 10வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதரபாத் இன்று மோதல்!
IPL 2025: தொடர் தோல்வியில் மும்பை.. 36 ரன்கள் வித்தியாத்தில் குஜராத் அபார வெற்றி!
What's Your Reaction?






