2000 ஆண்டுகள் பழமையான கோவிலில் சூரிய பூஜை.. பக்தர்கள் சாமி தரிசனம்..!

தஞ்சாவூர் கரந்தை அருள்மிகு கருணாசாமி திருக்கோயிலில் சூரிய பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.  இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Mar 17, 2025 - 12:29
Mar 17, 2025 - 12:33
 0
2000 ஆண்டுகள் பழமையான கோவிலில் சூரிய பூஜை.. பக்தர்கள் சாமி தரிசனம்..!
2000 ஆண்டுகள் பழமையான கோவிலில் சூரிய பூஜை.. பக்தர்கள் சாமி தரிசனம்..!

தஞ்சாவூர் அடுத்த கரந்தையில், பெரியநாயகி அம்மன் உடனுறை கருணாசாமி கோவில் என்கிற வசிஷ்டேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தேவாரப் பாடல் பெற்ற வைப்புத் தலமாகவும் விளங்கி வருகிறது. தஞ்சை பெரிய கோவில் கட்டப்படுவதற்கு முன்பே ராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் இக்கோவிலில் திருப்பணிகள் செய்து உள்ளார். 

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் சோழ மன்னனுக்கு தோல் நோயை குணமாக்கியதாக தல வரலாறு கூறுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 3,4,5 ஆகிய தேதிகளில் சூரிய பூஜை நடைபெறும், அதேபோல் இந்தாண்டு சூரிய பூஜை இன்று அதிகாலை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தஞ்சையை அடுத்த கரந்தை அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை கருணாசாமி திருக்கோயில் என்கிற அருள்மிகு வசிஷ்டேஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற வைப்புத் தலமாகவும் விளங்கி வருகிறது,தஞ்சை பெரிய கோவில் கட்டப்படுவதற்கு முன்பே ராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் இக்கோவிலில் திருப்பணிகள் செய்து உள்ளார், ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டதும்,கரிகால் சோழ மன்னனுக்கு அருள்பாலித்து.
 
ஸ்ரீ வசிஷ்ட மகா முனிவரால் பூஜிக்கப்பட்ட தலமாகவும் விளங்கி வருகிறது, இத்தகைய பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் சூரிய பூஜை நடைபெற்று வருகிறது. இதையடுத்து அதிகாலை  சூரிய உதயத்தில் வசிஷ்டேஸ்வரர் சுவாமி மீது சூரிய கதிர்கள் படும் நேரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது. 

முன்னதாக திரவிய பொடி, மஞ்சள்,பால், தயிர், சந்தனம் ஆகிய  அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow