சந்தோஷமா இருக்கணும்னா சனிக்கிழமையில் இதை வாங்காதீங்க!

சனிக்கிழமையில் கண்டிப்பாக வாங்க கூடாத பொருட்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Oct 19, 2024 - 16:03
 0
சந்தோஷமா இருக்கணும்னா சனிக்கிழமையில் இதை வாங்காதீங்க!
சந்தோஷமா இருக்கணும்னா சனிக்கிழமையில் இதை வாங்காதீங்க!

ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு தேதிக்கும் ஒவ்வொரு கிழமைக்கும் என ஒரு சிறப்பு இருக்கிறது. இந்த நாட்களில் எதை செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது? எனத் தெரிந்துவைத்துக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. ஏனெனில் நாம் கடையில் வாங்கும் சில பொருட்களால் கூட நமது வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன மற்றும் குடும்பத்தில் குழப்பம், சண்டை உள்ளிட்ட பிரச்சனைகளும் ஏற்பட்ட வாய்ப்புள்ளது. 

ஜோதிடத்தின்படி, சனிக்கிழமை என்பது சனி பகவானுக்குரிய நாளாகும். இது கெட்ட நாளாகவும் கருதப்படுகிறது. நவகிரகங்களில் ஒருவராக இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக சனி பகவான் பார்க்கப்படுகிறார். இவருடைய தீய பார்வைபட்டால் அரசன் கூட ஆண்டி ஆகி விடுவான் என்பது பலரின் நம்பிக்கை. சனியின் ஆதிக்கம் நிறைந்த சனிக்கிழமையில் எந்த காரியத்தை செய்வதையும் மக்கள் தவிர்க்கிறார்கள். அப்படி சனிக்கிழமையில் கண்டிப்பாக வாங்க கூடாத பொருட்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

இரும்புப் பொருட்கள்: 

சனிக்கிழமைகளில் இரும்புப் பொருட்கள் வாங்குவது கேடு விளைவிக்கும். இது குடும்பத்தில் உள்ளவர்களின் உறவுகள் மற்றும் ஒற்றுமையை பாதுக்கும் என ஆன்மிக வல்லுநர்கள் கூறுகின்றனர். அதே சமயம் சனிக்கிழமையில் இரும்பு தொடர்பான பொருட்களை தானம் அளிப்பது சனி பகவானின் அருளை பெற உதவும். இது அதிர்ஷ்டத்தை தருவதுடன் வாழ்வில் உள்ள பிரச்சனைகள், தடைகள் ஆகியவற்றை நீக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். 

உப்பு: 

உப்பு நமது வாழ்வில் எவ்வளவு அன்றாடமான விஷயம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் சனிக்கிழமைகளில் உப்பு வாங்குவது உங்களுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும். சனிக்கிழமை அன்று நீங்கள் உப்பு வாங்கினால் பொருள் இழப்பு, தொழில் நஷ்டம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உப்பு மகாலட்சுமிக்கு உரிய பொருளாகும். கல் உப்பை வெள்ளிக்கிழமையில் வாங்குவது மிகவும் சிறப்பானதாகும். இதனால் செல்வம் பெருகும்.

எண்ணெய்: 

சனிக்கிழமைகளில் எண்ணெய்கள் வாங்குவதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். இல்லையென்றால் பிரச்சனை உங்களுக்குத்தான். இந்த நாளில் நீங்கள் எண்ணெய் வாங்கினால் நீங்கள் கடனாளி ஆகி ஆயுசு முழுக்க அவஸ்தை பட நேரிடும். ஆனால் சனிக்கிழமையில் எண்ணெய் தேய்த்து குளிப்பது தோஷங்களை போக்கும். அதே சமயம் சனி பகவானுக்குரிய கருப்பு எள், எண்ணெய் ஆகியவற்றை சனிக்கிழமையில் தானமாக அளிப்பது மிகவும் நல்லது.

சுத்தம் செய்யும் பொருட்கள்: 

துடைப்பம் உள்ளிட்ட வீட்டை சுத்தம் செய்யும் பொருட்களை சனிக்கிழமைகளில் வாங்கக்கூடாது. குடும்பத்தில் உள்ள அன்பு, பாசம், மகிழ்ச்சி உள்ளிட்ட அனைத்துமே துடைத்து எறியப்படும். மேலும் இது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை மேலும் அதிகரிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow