உடல் வலியை நீக்கும் இடுக்கு பிள்ளையார் கோயில்... மிஸ் பண்ணிடாதீங்க.. அப்பறம் வருத்தப்படுவீங்க!

திருவண்ணாமலை கிரிவலம் செல்பவர்களின் உடல் வலியை இடுக்கு பிள்ளையார் கோயில் நீக்குவதாகக் கூறப்படுகிறது.

Aug 19, 2024 - 15:11
Aug 19, 2024 - 15:31
 0
உடல் வலியை நீக்கும் இடுக்கு பிள்ளையார் கோயில்... மிஸ் பண்ணிடாதீங்க.. அப்பறம் வருத்தப்படுவீங்க!
இடுக்கு பிள்ளையார் கோயில்

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் கோயில் பின்புறம் உள்ள மலையை சுற்றி சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.  

இந்த நிலையில் ஆடி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 19) மாலை 6.05 மணிக்கு தொடங்கி மறுநாள் 20ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4.48 மணிக்கு நிறைவடைகிறது. திருவண்ணாமலையில் பவுர்ணமி விழா மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளதால் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

கிரிவலப் பாதையில் பல்வேறு கோயில்கள் உள்ளன. அதில் குபேர லிங்கத்திற்கு அடுத்தபடியாக பழமை வாய்ந்த இடுக்கு பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. அப்படி இந்த இடுக்கு பிள்ளையார் கோயிலில் என்ன ஸ்பெஷல் என நீங்கள் நினைக்கலாம். 

இந்த இடுக்கு பிள்ளையார் கோயில் அளவில் சிறியது ஆனால் அறிவில் மிகப்பெரியது. இது சிறிய குகை போன்ற அமைப்புடன் மூன்று வாசல்கள் கொண்ட கோயில் ஆகும். அதன் முன் பகுதியிலொ நந்தியும், பின்புறத்தில் பிள்ளையாரும் உள்ளது. கோயிலின் பின் வாசல் வழியாக ஒருகளித்து படுத்தவாரு உள்ளே நுழைய வேண்டும். மெதுமெதுவாக கையுன்றி நகர்ந்து, நகர்ந்து முன் வாசல் வழியாக வெளிவர வேண்டும். முழுதாக வெளியே வரும்போது நந்தி சிலை முன்பு இருக்கும். ஆனால் வெளியே வந்து நந்தியை தொட்டு வணங்கி விட்டு எழுந்து நின்று பார்த்தால் அதற்குள் தான் நாம் வந்தோமா என்று தோன்றும். முதலில் சிறுபிள்ளைத்தனமாக இருக்கும். ஆனால் அதை அனுபவித்த பிறகு தெரியும் அதில் எவ்வளவு அறிவியல் விஞ்ஞானம் உள்ளது என்று. இந்த இடுக்கு பிள்ளையார் கோயில் குகைக்குள் பருமனாக உள்ள நபர்களால் நுழைய முடியாது என்று தோன்றலாம். ஆனால் அவர்களும் உள்ளே நுழைந்து எளிதாக வரலாம் என்பது இந்த கோயிலின் சிறப்பாகும். 

இடுக்குப் பிள்ளையார் கோயிலின் சிறப்புகள்!

இடுக்கு பிள்ளையாரை வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த கோயிலுக்குள் வளைந்து நுழைந்து வருவதால் தலைவலி, பில்லி, சூனியம், உடல் வலி, பிற நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. கிரிவலம் சென்றவர்கள் இங்கு வந்தால் உடல் வலி குறையும் என்பது ஐதீகம். இதனால் கிரிவலம் செல்லும் பக்தர்கள் இடுக்கு பிள்ளையார் கோயில் குகையில் நுழைந்து தங்களின் உடல் வலிகளையும் நீக்கிக் கொள்ளலாம். இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குள் நுழைந்து வெளியே வருவதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து விநாயகரை தரிசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோயில் 24 மணி நேரமும் திறந்திருக்கும். எனவே நீங்கள் எப்போது கிரிவலம் சென்றாலும் இடுக்கு பிள்ளையாரை தரிசனம் செய்யதால் பிணிகள் விலகும் என்பது ஐதீகம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow