சாட் ஜிபிடி சாதனையை முந்திய சத்குருவின் ‘மிராக்கிள் ஆப் மைண்ட்’ செயலி!

சத்குருவின் ‘மிராக்கிள் ஆப் மைண்ட்’ இலவச தியான செயலி வெளியான 15 மணி நேரத்தில் 10 லட்சம் பதிவிறக்கங்களை கடந்து சாட் ஜிபிடி-யின் சாதனையை முந்தியுள்ளது.

Mar 2, 2025 - 12:46
 0
சாட் ஜிபிடி சாதனையை முந்திய சத்குருவின் ‘மிராக்கிள் ஆப் மைண்ட்’ செயலி!
சாதனை படைத்த மிராக்கிள் ஆப் மைண்ட் செயலி

கோவை ஈஷா யோக மையத்தில் பிரமாண்டமாக நடந்து முடிந்த மஹாசிவராத்திரி விழாவில் சத்குருவின் ‘மிராக்கிள் ஆப் மைண்ட்’ இலவச தியான செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை இல்லாத சாதனையாக, வெளியான 15 மணி நேரத்தில் 10 லட்சம் பதிவிறக்கங்களை கடந்து சாட் ஜிபிடி-யின் சாதனையை முந்தியுள்ளது. 

இச்செயலி வெளியான 24 மணி நேரத்திற்குள் இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேஷியா, ஹாங்காங், ஜெர்மனி, கென்யா, UAE உள்ளிட்ட 20 நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் ஆங்கிலம், தமிழ், இந்தி, ரஷ்யம், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் இச்செயலி வெளியாகியுள்ளது. 

வெறும் 7 நிமிடத்தில் செய்து முடித்து விடக்கூடிய தியானம், முறையான வழிகாட்டுதல்களுடன் இந்த செயலியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எளிமை மற்றும் பயனுள்ள வடிவமைப்பால் இந்த செயலி அனைவரையும் கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் மன நலத்திற்கு  தியானமே பிரதான தீர்வு என்பதை உணர்த்தும் வகையில் புதிய அடையாளமாக இச்செயலி அமைந்துள்ளது.  

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயக்கப்படுவது இச்செயலியின் மற்றொரு சிறப்பம்சம். தியானம் மட்டுமன்றி சத்குருவின் விரிவான ஞானத்தை, பார்வையை, வழிகாட்டுதல்களை இது வழங்குகிறது. 

இது குறித்து, சத்குரு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2050-ஆம் ஆண்டுக்குள், உலக மக்கள் தொகையில் 30-33 சதவிகிதம் பேர் மனநோயால் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம், நம்  பிரச்சினைகளுக்கான தீர்வுகள் நமக்கு  வெளியில் இருப்பதாகவே நாம்  எப்போதும் கருதுகிறோம்.

ஆனால் எல்லா தீர்வுகளும் நமக்குள் தான்  இருக்கின்றன, ஆனால் அந்த உள்தன்மையை அணுகுவதற்கான வழி நம்மிடம் இல்லை. இந்த வழியை எப்படி அணுகல்லாம் என்பதை ‘மிராக்கிள் ஆப் மைண்ட்’ செயலி உங்களுக்கு கற்று தரும்.  உங்கள் வாழ்விலும், பிறரின் வாழ்விலும் இதை நிகழச் செய்ய தினமும் 7 நிமிடங்களை ஒவ்வொருவரும் செலவழியுங்கள். இதை நிகழச் செய்வோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் 60-70 மில்லியன் மக்கள் சாதரணமான மற்றும் தீவிரமான மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், உலகில் மிக அதிக தற்கொலைகள் இந்தியாவில் நடைபெறுகின்றன. தேசிய குற்றவியல் பதிவகம் (NCRB) வெளியிட்ட அறிக்கையின் படி 2022-ஆம் ஆண்டு மட்டும் 1.71 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்தியாவில் தற்கொலை விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 12.4 சதவீதமாக ஆக உயர்ந்து. இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமாகியுள்ளது. இது போன்ற மனநலன் சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்து வரும் இந்த முக்கிய தருணத்தில்,  ‘மிராக்கிள் ஆப் மைண்ட்’ செயலியின் வெற்றி ஒரு முக்கியமான மைல் கல்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow