'விக்ரம்-63' படத்தின் பெயர் இதுவா?-வெளியான புதிய தகவல்
‘வீர தீர சூரன்’ திரைப்படம் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்துள்ளதால் விக்ரமின் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விக்ரம்-மடோன் அஸ்வின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம்-மடோன் அஸ்வின் கூட்டணி
நாளை இயக்குநர் நிகழ்ச்சியின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகம் ஆனவர் இயக்குநர் மடோன் அஸ்வின். மண்டேலா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பெரிய கவனம் பெற்றார். இந்த படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதையும் வென்றார்.
Read more: பெண் ஊழியரின் கைப்பை பறிப்பு.. அத்துமீறிய பேரூராட்சி தலைவர்
இதைத்தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து 'மாவீரன்' திரைப்படத்தை எடுத்தார். இத்திரைப்படம் விமர்சன ரீதியாக கவனம் பெற்றதுடன் ரூ.90 கோடி வரை வசூலித்து வெற்றி பெற்றது.
படத்தின் பெயர்
இந்த நிலையில் தான், சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் விக்ரமை வைத்து மடோன் அஸ்வின் புதிய படத்தை இயக்குகிறார். இது நடிகர் விக்ரமிற்கு 63வது படமாக உருவாகிறது. விக்ரமின் 63வது படத்திற்கு ‘வீரமே ஜெயம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Read more: ஆய்வுக்கு வந்த அமைச்சரிடம் சமூக ஆர்வலர் வாக்குவாதம்!
மேலும் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்கும் என தெரிகிறது. படத்தை விரைந்து முடிப்பதற்கான பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. மாவீரன் திரைப்படத்தில் ‘வீரமே ஜெயம்’ என்ற டயலாக் அடிக்கடி வந்து போகும். இதையே விக்ரமின் படத்தின் பெயராக வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘வீர தீர சூரன்’ திரைப்படம் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
What's Your Reaction?






