பெண் ஊழியரின் கைப்பை பறிப்பு.. அத்துமீறிய பேரூராட்சி தலைவர்

கன்னியாகுமரி மாவட்டம் ரீத்தாபுரம் பேரூராட்சியில் பெண் ஊழியர்களிடம் பேரூராட்சி தலைவர் அத்துமீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, சிசிடிவி ஆதாரங்களுடன் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கவுன்சிலர் அளித்த புகாரில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில்,  இரவு நேரத்தில், வீட்டிற்கு புறப்பட்ட பெண் ஊழியரின் கைப்பையை வலுக்கட்டாயமாக தலைவர் பறித்து வைத்து கொண்டு அலக்கழிக்கும் சிசிடிவி காட்சி பதிவுகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Mar 30, 2025 - 12:24
 0
பெண் ஊழியரின் கைப்பை பறிப்பு.. அத்துமீறிய பேரூராட்சி தலைவர்
பெண் ஊழியரின் கைப்பை பறிப்பு.. அத்துமீறிய பேரூராட்சி தலைவர்

கன்னியாகுமரி மாவட்டம் ரீத்தாபுரம் பேரூராட்சி தலைவராக இருந்து வருபவர் எட்வின் ஜோஸ். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர். பேரூராட்சியில் பணியாற்றும் பெண் ஊழியர்களிடம் கடந்த ஒரு வருடமாக அத்துமீறி நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த நிலையில் பேரூராட்சி 7-வார்டு கவுண்சிலர் ஜெயசேகர் என்பவர் பேரூராட்சி தலைவர் எட்வின் ஜோஸ் பெண் ஊழியர்களை இரவு வரை பணியற்ற வற்புறுத்துவதோடு அவர்களிடம் அத்து மீறுவதாகவும் பணியிட மாற்றம் செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் ஊழியர்களிடம் தலைவர் அத்துமீறும் 10-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவிடம் நேற்று புகாரளித்தார்.

புகாரின் அடிப்படையில் துறை ரீதியிலான விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில் மாலை ஆறு மணியளவில் அலுவலகத்திற்கு வரும் தலைவர் பெண் ஊழியரின் இருக்கையில் அமர்ந்து கொண்டு வீட்டிற்கு செல்ல கைப்பையை எடுக்க முயன்ற பெண் ஊழியரின் கைப்பையை  வலுக்கட்டாயமாக பிடுங்கி பறித்து வைத்து கொண்டு அலைக்கழிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேரூராட்சி தலைவர் ஏட்வின் ஜோஸ்-ஐ செல்போணில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்ட போது, அரசியல் காழ்ப்புணர்சியால் இது போன்று கவுன்சிலர் ஜெயசேகர் செய்து வருவதாகவும், தன்னை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோற்றவர் என்றும் பெண் ஊழியரை இரவு 10-மணி வரை பணியாற்ற கூறிதான் கைப்பையை பறித்து வைத்ததாகவும் ஆட்சியரின் விசாரணைக்கு ஒத்துழைக்க போவதாகவும் விளக்கமளித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow