வழக்கறிஞர் கொலையில் புதிய திருப்பம் - 2 பேரிடம் போலீஸ் விசாரணை
வெங்கடேசனின் மனைவி சரளா கொடுத்த புகாரின் பேரில், கொலை வழக்குப்பதிவு செய்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை விருகம்பாக்கம் கணபதி ராஜ் நகர் பிரதான சாலையில் பிரஸ்டீஜ் மல்டி ஹோம்ஸ் பவுல்ராஜ் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. காவல்துறைக்கு அந்த அடுக்குமாடி குடியிருப்பின் வசிக்கும் பொதுமக்கள் குடியிருப்பின் மீது ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக புகார் அளித்துள்ளனர்.
வழக்கறிஞர் கொலை
வீடும் இரண்டு நாட்களாக பூட்டப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் சம்பந்தப்பட்ட பூட்டப்பட்ட வீட்டை உடைத்து சோதனை நடத்தியுள்ளனர். வீட்டின் உள்ளே அழுகிய நிலையில் இளைஞர் ஒருவர் கிடந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் தலையில் வெட்டு காயங்களுடனும் முகத்தில் வெட்டுப்பட்டு கத்தியுடன் இருப்பது தெரிய வந்தது.
Read more: தமிழகம் முழுவதும் ரமலான் கொண்டாட்டம்- சிறப்பு தொழுகை செய்து இஸ்லாமியர்கள் வழிபாடு
அழுகிய நிலையில் இருக்கும் உடலை மீட்டு விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் உள்ள வெட்டு காயங்களை வைத்து பார்க்கும் பொழுது இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
2 பேரிடம் விசாரணை
மேலும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை செய்ததில் கொலை செய்யப்பட்டவர் வேளச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடேஷ் என தெரியவந்துள்ளது. இந்த வீட்டு உரிமையாளர் இடமும் போலீசார் விசாரணை நடத்தினர். சேதுபதி என்பவரோடு கடந்த நான்கு மாதங்களாக இந்த வீட்டில் வாடகைக்கு இருந்து கூறப்படுகிறது. வீடு இரண்டு நாட்களாக மூடப்பட்டு இருக்கிற காரணத்தினால், உடன் வசித்த இளைஞர்கள் இந்த கொலையை செய்துள்ளார்களா என்ற அடிப்படையில் போலீசார் அவர்களைத் தேடி வருகின்றனர்.
Read more: RR vs CSK: தொடர் தோல்வியில் சிஎஸ்கே... முதல் வெற்றியை ருசித்த ராஜஸ்தான்!
இந்த நிலையில், கொலை செய்யப்பட்டவர் நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் வழக்கறிஞர் பிரிவு மாநில இணை செயலாளராக உள்ளார்.
கொலை செய்யப்பட்ட வெங்கடேசனின் மனைவி சரளா கொடுத்த புகாரின் பேரில், கொலை வழக்குப்பதிவு செய்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொலையான வெங்கடேசனின் நண்பர்கள் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வெங்கடேசனை கொலை செய்ததாக கூறப்படும் கார்த்திகை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து சிவகங்கை உள்ளிட்ட சில மாவட்டத்திற்கு விரைந்துள்ளனர். கார்த்திக் மீது 27 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், பி கேட்டகரி சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்துள்ளது.
What's Your Reaction?






