'நீங்க வந்தா மட்டும் போதும்...' 92 ரூபாய்க்கு ஒரு வீடு! அரசின் அசத்தல் அறிவிப்பு!
இத்தாலியில் உள்ள ஒரு கிராமத்தில் 92 ரூபாய்க்கு ஒரு வீடு விற்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு பின்னணியில் உள்ள காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

வீடு கட்டணும்... மிடில் க்ளாஸ் மக்களின் பெரும் கனவு இது. இதற்காக செலவு போக மிச்சம் இருக்கும் காசை குருவி சேர்ப்பதுபோல் நம்மில் பலர் சேர்த்துவைத்தும் வருகிறோம். இன்னும் சிலரோ இப்போது இருக்கும் விலைவாசிக்கு நம்மால் கடைசி வரை வீடே வாங்க முடியாது என நம்பிக்கையை இழந்தேவிட்டனர்.
அப்படி பட்டவர்களுக்காக தான் ஒரு சாதாரண காஃபியின் விலையில் ஒரு வீட்டையே விற்பதாக அறிவித்துள்ளது இத்தாலிய சேர்ந்த ஒரு கிராமம். யோசித்து பாருங்கள் எந்த கவலையும் இல்லாமல், chill பண்ணிட்டு, புத்தங்கங்கள், இயற்கை, திரைப்படங்கள் இப்படி நம் வாழ்க்கையை வாழ்ந்தால் எப்படி இருக்கும்? ஆனால் தற்போது இருக்கும் இந்த விலைவாசி உயர்வில் இது சாத்தியமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இது சாத்தியம் தான்.
இத்தாலியில் உள்ள பென்னே என்ற கிராமத்தில் உள்ள வீடுகளை 1 யூரோவுக்கு விற்பதாக அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு. அதாவது 92 ரூபாய்க்கே வீடு கிடைக்குமாம்.
உலகத்தின் எல்லா நகரங்களிலும் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே வரும் இந்த நேரத்தில், இத்தாலியில் உள்ள இந்த டவுனில் மட்டும் மக்கள் தொகை குறைந்துக்கொண்டே போகிறதாம். அதாவது வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சின்னு இங்க இருக்க மக்கள் கிராமத்த விட்டு வெளியேறிக்கொண்டே வருவதால், மனிதர்களே இல்லாத பேய் கிராமமாக அப்பகுதி மாறிவருகிறது. இதன்படி தற்போது இப்பகுதியில் வெறும் 1000 பேர் மட்டுமே வசிக்கின்றனராம். இதனால் அரசு இதுபோன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இப்படி இருக்கும் பட்சத்திலும் இங்கு வீடு வாங்குவதற்கென சில கண்டிஷன்கள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இங்கு வீடு வாங்க நினைப்பவர்கள் 1,85,072 ரூபாய் முதல் 4,62,680 ரூபாய் வரை கியாரண்டிக்காக கொடுக்க வேண்டுமாம். அப்படி பணம் பெறப்பட்டதும் வீட்டை புதுபிப்பதற்கான பணிகள் முடிந்ததும் இந்த பணம் திருப்பிக்கொடுக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் அரசாங்க கொடுக்கும் காசை வாங்கிக்கொண்டு நிம்மதியாக வாழ நினைப்பவர்கள் இங்கே போகலாம். ஆனால் இங்கு எதுவுமே இலவசம் இல்லை என நம் எல்லோருக்குமே தெரியும். அதனால் தான் அரசாங்கம் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு இங்கே தஞ்சம் புகும் மக்கள் குறைந்தபட்சம் 10 வருடங்களாவது இங்கே வாழவேண்டும் என கூறப்படுகிறது. அப்படி இல்லையென்றால் அந்த காசை அரசுக்கு திருப்பிக்கொடுக்க வேண்டும் என கூறப்படுகிறது.
What's Your Reaction?






