14 வயதில் தங்கப் பதக்கம்.. பாரிஸ் ஒலிம்பிக்கில் வீராங்கனை அசத்தல்..

Paris Olympics 2024 Gold Medalist : பாரிஸ் ஒலிம்பிக்கில் 14 வயதில் தங்கப் பதக்கம் வென்ற ஜப்பான் வீராங்கனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனது.

Jul 29, 2024 - 13:22
Jul 29, 2024 - 14:36
 0
14 வயதில் தங்கப் பதக்கம்.. பாரிஸ் ஒலிம்பிக்கில் வீராங்கனை அசத்தல்..
தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்ற ஜப்பான் வீராங்கனைகள் மற்றும் பிரேசில் வீராங்கனை

Paris Olympics 2024 Gold Medalist : உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 33வது ஒலிம்பிக் தொடர் [Paris Olympics 2024] பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நடைபெற்று வருகிறது. இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கிய இந்த ஒலிம்பிக் தொடர், வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சுமார் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ஜப்பான் 4 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 7 பதக்கங்களுடன் முதலிடத்திலும்,  ஆஸ்திரேலியா 4 தங்கம், 2 வெள்ளி என 6 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும், 3 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களுடன் 3ஆவது இடத்திலும் உள்ளன. இந்தியா ஒரு வெண்கலப் பதக்கத்துடன் 22ஆம் இடத்தில் உள்ளது.

இதற்கிடையில் நேற்று நடைபெற்ற மகளிர்களுக்கான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இதில், ஜப்பானின் யோஷிஸவா கோகோ [Yoshizawa Coco] 272.75 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். அதே போட்டியில், அதே ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பதினைந்து வயதே நிரம்பிய லிஸ் அகாமா [Liz Akama] 265.95 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த 16 வயது நிரம்பிய ரேஸா லீல் [Rayssa Leal] 253.37 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

மேலும் படிக்க: டெஸ்ட் போட்டியா, டி20 போட்டியா?.. காட்டடி அடித்த பென் ஸ்டோக்ஸ் சாதனை

யோஷிஸவா தனது நான்காவது ட்ரிக்கில் அற்புதமாக முன்பக்கம் சுழன்று நின்றதால், 96.46 புள்ளிகள் பெற்றதால் முதலிடத்திற்கு முன்னேறினார். லிஸ் அகாமா தனது முதல் ட்ரிக்கிலேயே 92.62 புள்ளிகள் பெற்றிருந்தபோதும், கடைசி மூன்று ட்ரிக்குகளில் சரியாக ஸ்கோர் செய்ய முடியாததால் புள்ளிகளில் பின்தங்கினார். அதேபோல, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரேஸா லீல் இறுதி ட்ரிக்கில் கிக்ஃபிளிப் அடித்ததன் மூலம் 88.83 புள்ளிகள் பெற்றார் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

இது ஒருபுறம் இருக்க 14 மற்றும் 15 வயதில் பதக்கங்களை வென்ற வீராங்கனை குறிப்பிட்டு இணையவாசியகள் வேறு மாதிரி டிரெண்டிங் செய்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய 14 வயதில் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்று பதிவிட்டு வருகின்றனர். நெல்லிக்காய் சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் இனிப்பு சுவைக்காக வாய் பிளந்தது, WWF கார்டுகளை வைத்து விளையாடியது, பழைய புத்தகங்களை ஐஸ் வியாபாரியிடம் விற்று ஐஸ் வாங்கியது என ஒவ்வொருவரும் தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow