இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி அபார வெற்றி

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 225 இடங்களில் 159 இடங்களை வென்று அதிபர் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றுள்ளது

Nov 16, 2024 - 05:55
Nov 16, 2024 - 05:56
 0
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி அபார வெற்றி
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி அபார வெற்றி

இலங்கையில் கடந்த செப்டம்பர் 21ம் தேதி அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேசிய மக்கள் சக்தி  சார்பாக போட்டியிட்ட அனுர குமார திசநாயக வெற்றி பெற்று செப்டம்பர் 23ம் தேது பதவியும் ஏற்றுக்கொண்டார். ஆனால், அவரது தேசிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்றத்தில் 3 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். இதனால், பெரும்பாண்மை நோக்கத்தில் நாடாளுமன்றத்தை கலைத்தார் அதிபர் திசநாயகா.

இதனைத் தொடர்ந்து,  நேற்று (நவம்பர் 14) ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தங்களுடைய வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளதுஇந்நிலையில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. இத்தேர்தலில், அதிபர் அநுர குமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் கட்சி மொத்தம் 225 இடங்களில் 159 இடங்களை வென்று தனி பெரும்பான்மையை பெற்றுள்ளது.

அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி 62 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 159 இடங்களை ஆளும் என்பிபி கூட்டணி கைப்பற்றி புதிய சகாப்தத்தை படைத்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் தேர்தலில், அதிபர் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி, புதிய ஜனநாயக முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. 

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் முதல்முறையாக தோல்வியை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா தோல்வியை தழுவியுள்ளார். நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களுடைய பதவிகளை இழந்துள்ளனர்.

மக்கள் அளித்த இந்த அமோக வெற்றியைத் தொடர்ந்து, அநுர குமரா திசநாயக "மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி"  தெரிவித்துள்ளார்

தோல்வியை தழுவிய முக்கிய தலைவர்கள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தோல்வியடைந்துள்ளார்.

ப்ளொட் இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் யாழ்ப்பாண மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற அங்கஜன் ராமநாதன் இம்முறை தோல்வியடைந்தார்.

இலங்கை தமிழ் காங்கிரஸின் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்தார்.

ஈபிடிபியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இம்முறை பொதுத் தேர்தலில் தோல்வியுற்றதுடன், அவர் முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்வாக தவறியுள்ளார்.

வன்னி மாவட்டத்தில் கடந்த தடவை ஈபிடிபி சார்பாக நாடாளுமன்றத்துக்குத் தேர்வான குலசிங்கம் திலீபன் இம்முறை தேர்தலில் தோல்வியுற்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பாகக் கடந்த தடவை நாடாளுமன்றத்துக்குத் தெரிவான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இம்முறை தேர்தலில் தோல்வியுற்றார்.

அத்துடன் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டுக் கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி இம்முறை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் மட்டக்களப்பில் போட்டியிட்ட கோவிந்தம் கருணாகரன் தோல்வியுற்றார்.

பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கடந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அருணாச்சலம் அரவிந்த்குமார் மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோர் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்தனர்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் 

  •  தேசிய மக்கள் சக்தி - 6,863,186 வாக்குகள் (159 இடங்கள் ) 
     
  • ஐக்கிய மக்கள் சக்தி - 1,968,716 வாக்குகள் (40 இடங்கள் ) 
     
  • இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - 257,813 வாக்குகள் (8 இடங்கள் ) 
     
  • புதிய ஜனநாயக முன்னணி - 500,835 வாக்குகள் (5 இடங்கள் ) 
     
  • ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 350,429 வாக்குகள் (3 இடங்கள் ) 
     
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 87,038 வாக்குகள் (3 இடங்கள் ) 
     
  • சர்வஜன அதிகாரம் - 178,006 வாக்குகள் (1இடம்) 
     
  • ஐக்கிய தேசிய கட்சி - 66,234 (1இடம்) 
     
  • ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 65,382 (1 இடம் ) 
     
  • அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - 39,894 (1 இடம் ) 
     
  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 33,911 வாக்குகள் (1 இடம் ) 
     
  • சுயேட்சைக்குழு 17 - 27,855 வாக்குகள் (1 இடம் ) 
     
  • ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 17,710 (1 இடம் )

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow