டெய்லர் அக்காவை வம்பிழுத்த பிரியாணி மேன்..வச்சு செய்த ஏ2டி.. நெட்டிசன்கள் கமெண்ட்

Biriyani Man Vs Tailor Akka : ஏ2டி என்ற யூடியுபர், டெய்லர் அக்கா குறித்து பிரியாணி மேன் வைத்த குற்றச்சாட்டுகளின் உண்மை நிலவரம் குறித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் டெய்லர் அக்கா மீது பிரியாணி மேன் வைத்த புகார்கள் அனைத்தும் பொய்யானது என்று ஆதாரங்களுடன் நிரூபித்து இருந்தார்.

Jul 29, 2024 - 13:07
Jul 29, 2024 - 14:44
 0
டெய்லர் அக்காவை வம்பிழுத்த பிரியாணி மேன்..வச்சு செய்த ஏ2டி.. நெட்டிசன்கள் கமெண்ட்
Biriyani Man Vs Tailor Akka YouTuber Issue

Biriyani Man Vs Tailor Akka : சோஷியல் மீடியாவை பொறுத்தவரை தினம் தினம் ஒவ்வொருவர் டிரெண்ட் ஆவார்கள். ஆனால் சிலரால் என்ன செய்தாலும் டிரெண்டிங்கில் வர முடியாது. அதற்காக டிரெண்டிங்கில் உள்ளவரை வம்பிழுத்தால் தாமும் டிரெண்ட் ஆகிடலாம் என்ற ஐடியா அண்மை காலமாக பல சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்களிடம் இருந்து வருகிறது...

அப்படி டிரெண்டிங்கான இர்ஃபானையும் டெய்லர் அக்கா என்பவரையும் வம்பிழுத்து நெகடிவ் பப்ளிசிட்டியை தேடி வருகிறார் பிரியாணி மேன் என்ற யூடியுபர். 

பிரியாணி மேன் என்பவரின் நிஜப் பெயர் ரபி. Dark வீடியோக்கள் என்ற பெயரில் abusive ஆன கண்டெண்டுகளை கொடுத்து வன்மத்தை கொட்டி வருகிறார். என்னத்தான் பிற யூடியுபர்களும் abusive ஆக பேசி வீடியோ வெளியிட்டாலும் பிரியாணி மேன் அளவுக்கு அதிகமாக பெண்கள் குறித்து ஆபாசமாக பேசுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.  இவர்மீது எக்கச்சக்க புகார்கள் இருக்கின்றன. 

ஏற்கனவே பிரபல யூடியுபர் இர்பானை வம்பிழுத்திருந்த பிரியாணி மேன், ஓராண்டுகளுக்கு முன்பு இர்பானின் மச்சான் ஏற்படுத்திய கார் விபத்தை பற்றி விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அந்த விபத்தானது இர்பான் செய்த விபத்து என்று பிரியாணி மேன் கூற, தன் மச்சான் தான் கார் ஓட்டினார் என்ற ஆதாரங்களை காட்டி பதிலடி கொடுத்து இருந்தார் இர்பான். 

இந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில், டெய்லர் அக்காவை வம்பிழுத்து மீண்டும் பப்ளிசிட்டி தேட முயன்றார் பிரியாணி மேன். டெய்லர் அக்கா வெளியிடும் ப்ளவுஸ் வீடியோக்கள் ஆபாசமாக இருப்பதாகவும், மோசடி செய்வதாகவும் புகார்களை வைத்திருந்தார். ஆனால் டெய்லர் அக்கா இதெல்லாம் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார். 

இந்த நிலையில் தான், ஏ2டி என்ற யூடியுபர், டெய்லர் அக்கா குறித்து பிரியாணி மேன் வைத்த குற்றச்சாட்டுகளின் உண்மை நிலவரம் குறித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் டெய்லர் அக்கா மீது பிரியாணி மேன் வைத்த புகார்கள் அனைத்தும் பொய்யானது என்று ஆதாரங்களுடன் நிரூபித்து இருந்தார். 

இதனைத் தொடர்ந்து, பிரியாணிமேன் மீது அதிகளவிலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்ததாகவும், இதனால் கடுப்பான பிரியாணி மேன், லைவ் வீடியோவில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்போது அவரது தாய் கதவை தட்டி தடுத்துள்ளார். இதனை லைவில் பார்த்த நெட்டிசன்களில் சிலர் அதிர்ச்சியடைந்தாலும், இதெல்லாம் பப்ளிசிட்டி ஸ்டண்டுகள், அனுதாபம் சம்பாதிக்கத்தான் பிரியாணி மேன் இப்படி செய்துள்ளார் என்று விமர்சனங்களையும் முன் வைத்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow