அதிகரிக்கும் இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம்... பழிதீர்க்கத் துடிக்கும் நெதன்யாகு!

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ஈரானின் சிரியாவை தாக்கி வருகிறது.

Oct 3, 2024 - 16:27
 0
அதிகரிக்கும் இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம்... பழிதீர்க்கத் துடிக்கும் நெதன்யாகு!
அதிகரிக்கும் இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் காஸாவில் இதுவரை 35,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டனர். மேலும் காஸா நகரில் வீடுகள், மருத்துவனைகள் என அனைத்து கட்டடங்களும் இடிந்து முற்றிலுமாக தரைமட்டமாகியுள்ளன.

இதனால் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் காஸாவில் இருந்து வெளியேறி உணவு, உடை, மருத்துவ வசதிகளில் இன்றி பரிதவித்து வருகின்றனர். இந்த போரை உடனடியாக நிறுத்தும்படி ஐநா சபை இஸ்ரேலை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் பல்வேறு உலக நாடுகள் வழியுறுத்தியும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த மறுத்து வருகிறது.  

லெபானான் மீதும் ஹிஸ்புல்லாக்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பழிவாங்கும் விதமாக, ஈரான் வெகுண்டு எழுந்துள்ளது. அதன்படி நேற்று (அக். 1) இரவு இஸ்ரேல் மீது ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை சிறிதும் எதிர்பாராத இஸ்ரேல் ராணுவம் ஸ்தம்பித்து போனது. இந்த சம்பவம் உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலை, அமெரிக்க அதிபர் பைடன் வண்மையாகக் கண்டித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்ட பைடன், இஸ்ரேலுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.  

இந்நிலையில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வான்வழி தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல் நேற்று முன்தினம் அங்கு தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ளது. தெற்கு லெபனானில் உள்ள 50 கிராமங்களைச் சேர்ந்த மக்களை அங்கிருந்து வெளியேற இஸ்ரேல் முன்பே எச்சரித்திருந்தது. இதனை தொடர்ந்து இஸ்ரேல் எல்லைக்கு அருகே உள்ள கிராமங்களில் மட்டும் அந்நாட்டு ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது. லெபனானில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் தாக்குதலில் 46 உயிரிழந்ததாகவும், 85 பேர் காயமடைந்ததாகவும் லெபனானின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

மேலும் பெய்ருட்டில் மக்கள் தொகை அதிகமுள்ள புறநகர்ப் பகுதியிலும் இஸ்ரேல் ஏவுகணைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதனிடையே தெற்கு லெபனானில் தரைவழித் தாக்குதலில் 8 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிரியா தலைநகர் டமாஸ்கஸில் ஹிஸ்புல்லா தலைவர்கள் மற்றும் ஈரானிய புரட்சியாளர்கள் அடிக்கடி சந்தித்து கொள்ளும் குடியிருப்பு கட்டிடத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை குறிவைத்து இஸ்ரேலிய விமான படை தாக்குதலில் நடத்தியது. இந்த சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் லெபனானில் 150 பயங்கரவாத உட்கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow