உலகம்

டிரம்பின் முடிவால் எகிறிய தங்கம் விலை.. அடுத்து என்னவா இருக்கும்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பால் சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

டிரம்பின் முடிவால் எகிறிய தங்கம் விலை.. அடுத்து என்னவா இருக்கும்?
டிரம்பின் முடிவால் எகிறிய தங்கம் விலை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தங்கள் நாட்டின் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரியை விதித்துள்ளார். அதன்படி, இந்தியாவிற்கு 26 சதவிகிதம், சீனாவிற்கு 34 சதவிகிதம், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 20 சதவிகிதம், ஜப்பானுக்கு 24 சதவிகிதம் என பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரியை அறிமுகப்படுத்தியுள்ளார். 

மேலும், அமெரிக்காவின் 10 சதவிகித அடிப்படை வரியானது வரும் 5-ஆம் தேதியில் இருந்தும், அதற்கு மேல் விதிக்கப்பட்டுள்ள வரி வரும் 9-ஆம் தேதியிலிருந்தும் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த பரஸ்பர வரி விதிப்பானது அமெரிக்க பங்கு சந்தையில் எதிரொலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, உலகளாவிய சந்தைகளில் பிரபல நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஆசிய சந்தைகளும் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. சீனா மீது விதிக்கப்பட்டுள்ள 34 சதவிகித பரஸ்பர வரியால் அந்நாட்டு நிறுவனங்களின் பங்குகள் நான்கு சதவிகிதம் வரை சரிவை சந்தித்துள்ளது. மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 7 சதவிகிதம் வரை சரிவை சந்தித்துள்ளது.

தங்கம் விலை உயர்வு

அதிபர் டொனால்ட் டிரம்பின் அதிரடி முடிவால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. உலக பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் வர்த்தக மோதல்கள் காரணமாக கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உச்சதை தொட்டு வருகிறது. 

சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் ஒரு கிராமிற்கு 50 ரூபாய் உயர்ந்து 8,560 ரூபாயாக விற்கப்படுகிறது. இதேபோன்று, ஒரு சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 68,480 ரூபாயாக விற்கப்படுகிறது. டிரம்பின் பரஸ்பர விதி மட்டுமல்லாமல் மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவும் போர் சூழல் காரணமாகவும் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.