அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் வெற்றி பெற விரும்பும் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி?

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்தது முதல் மெலனியா டிரம்ப் தனது கணவருடன் பொது வெளியில் தோன்றுவதை தவிர்த்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. டொனால்ட் டிரம்ப் பிரசாரத்தின்போதும் மெலனியா அதிகம் தலை காட்டவில்லை என தகவல்கள் கூறுகின்றன.

Sep 2, 2024 - 15:10
Sep 3, 2024 - 10:24
 0
அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் வெற்றி பெற விரும்பும் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி?
Donald Trump And Melania

வாஷிங்டன்: அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் களமிறங்கியுள்ளார். ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக இருக்கும் இந்திய வம்சாவளியான 59 வயதான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். 

கமலா ஹாரிஸும், டொனால்ட் டிரம்ப்பும் வரும் 4ம் தேதி நேரடி விவாதத்தில் பங்கேற்க உள்ள நிலையில், இருவரும் தொடர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.  டொனால்ட் டிரம்ப்பை கொள்கைரீதியாக எதிர்க்கும் கமலா ஹாரிஸ், டிரம்ப் ஆட்சி காலத்தில் செய்த தவறுகளை பட்டியலிட்டு பேசி வருகிறார். 

மேலும் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அத்தியாசிய பொருட்களின் விலையை குறைக்கப்படும், மருத்துவ சேவைகள் அனைவருக்கும் குறைந்த விலையில் கிடைக்கும். மலிவு விலை வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்துள்ளார். மறுபக்கம், கமலா ஹாரிஸை எளிதாக தோற்கடித்து விடுவேன் என்று கூறும் டிரம்ப், இதற்கு முன்பு இந்தியர் என கூறிய கமலா ஹாரிஸ், இப்போது தான் ஒரு கறுப்பர் என கூறி அனுதாபம் தேடுகிறார் என்ற கடும் விமர்சனத்தை கூறியுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என்று டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் விரும்புவதாக டிரம்ப்பின் முன்னாள் உதவியாளர் ஆண்டனி ஸ்காராமுச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட ஆண்டனி ஸ்காராமுச்சி, ''கமலா ஹாரிஸ் வெற்றி பெற விரும்புவர்கள் என்னை விட யாரும் இருக்க முடியாது. ஆனால் மெலனியா டிரம்ப் என்னை விட கமலா ஹாரிஸ் வெற்றிக்காக மிகவும் ஆர்வமாக இருக்கிறார். ஏனெனில் அவர் டொனால்ட் டிரம்ப்பை வெறுக்கிறார். டொனால்ட் ட்ரம்ப் மீதான வெறுப்பை மெலனியா தரத்தின்படி நான் தீர்மானிக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

ஆண்டனி ஸ்காராமுச்சி டொனால்ட் டிரம்ப் ஆட்சி காலத்தில் வெறும் 11 நாட்கள் வெள்ளை மாளிகை தகவல் தொடர்பு இயக்குநராக பணியாற்றினார். பின்பு அவர் டிரம்பால் பணிநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது 

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்தது முதல் மெலனியா டிரம்ப் தனது கணவருடன் பொது வெளியில் தோன்றுவதை தவிர்த்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. டொனால்ட் டிரம்ப் பிரசாரத்தின்போதும் மெலனியா டிரம்ப் அதிகம் தலை காட்டவில்லை என்றும் டிரம்ப் வேட்புமனு தாக்கல் செய்தபோது கூட  மெலனியா இல்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow