Olympic 2024: போராட்டம் ஒருபக்கம்... சொதப்பல் மறுபக்கம்... தொடங்கியது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள்!

2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொடங்கியது. 33வது ஒலிம்பிக் போட்டியான இது, போராட்டங்களுக்கும் சொதப்பல்களுக்கும் மத்தியில் தொடங்கியதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jul 27, 2024 - 08:05
 0
Olympic 2024: போராட்டம் ஒருபக்கம்... சொதப்பல் மறுபக்கம்... தொடங்கியது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள்!
Olympics 2024

பாரிஸ்: 33வது ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா பிரம்மாண்டமாக இருந்தாலும், அதில் பல சொதப்பல்கள் நடந்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உலகளவில் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் 17 நாட்கள் நடைபெறுகின்றன. ஆகஸ்ட் 11ம் தேதி வரை பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெறும் இதில், மொத்தம் 10,500 வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள 117 வீரர்கள், வீராங்கனைகள் 20 பிரிவுகளில் விளையாட உள்ளனர். இந்நிலையில், இன்று நள்ளிரவு பாரிஸில் ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

பாரிஸில் உள்ள செய்ன் நதியில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடக்கவிழாவில் பல சொதப்பல்களான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. ஒலிம்பிக் தொடக்கவிழாவுக்கு சுமார் 40,000 பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி இருந்தும் பிரான்ஸில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தக் கூடாது என அந்நாட்டின் ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தினர். அவர்கள் பேருந்துகள், ரயில்கள் மீது தாக்குதல்கள் நடத்தியதால், தொடக்க விழாவிற்குச் சென்றவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் பாரிஸில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், மழை காரணமாகவும் தொடக்கவிழா பேரணியில் பங்கேற்ற வீரர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.+

அதாவது, பிரான்ஸின் வாழ்வியலை முன்னிறுத்தும் வகையில் பாரிஸில் தொடக்க விழா நடைபெறும் என அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. அதோடு முதன்முறையாக நதியில் இந்த விழாவை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதுவரை நடந்த ஒலிம்பிக் தொடக்க விழாக்கள் பெரிய பெரிய மைதானங்களில் நடைபெற்றுள்ளன. ஆனால் முதன்முறையாக நதியில் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு தொடக்க விழாவை நடத்த திட்டமிட்டிருந்தது பிரான்ஸ். அதன்படி நள்ளிரவில் வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் தொடங்கிய இந்த தொடக்க விழாவில், திடீரென மழை குறுக்கிட்டது.

மேலும் படிக்க - ராயன் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

இதனால், படகுகளில் அணிவகுத்தச் சென்ற வீரர்கள் மழையில் நனைந்தபடியே இந்த விழாவில் பங்கேற்றன. முக்கியமாக வீரர்கள் பலருக்கும் ரெயின் கோர்ட் கூட கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தொடக்க விழாவின் போது பாரிஸின் அழகை காட்டுவதாக, ஏற்கனவே ஷூட் செய்து வைத்திருந்த வீடியோவை ஒளிபரப்பியதும் ரசிகர்களுக்கு அதிருப்தியை கொடுத்தது. தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்ததால் விழாவை பார்க்கச் சென்ற ரசிகர்களும் நீண்ட நேரமாக மழையில் நனைந்தபடி அவதிப்பட்டனர். இந்திய அணி சார்பில் பிவி சிந்து, சரத் கமல் ஆகியோர் தேசிய கொடியை ஏந்திச் சென்றனர். அவர்களும் மழையில் நனைந்தபடி சென்றது குறிப்பிடத்தக்கது. 

இத்தனை சொதப்பல்களுக்கும் மத்தியில் ஓரிரு இசை நிகழ்ச்சிகள் மட்டுமே தங்களை கவர்ந்ததாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இசை நிகழ்ச்சிகளும் மேடைகளில் நடைபெறாமல், நதிக்கரையின் ஓரமாக நடைபெற்றதால், அப்பகுதியில் இருந்தவர்களால் மட்டுமே பார்க்க முடிந்துள்ளது. அதேபோல், மழையின் காரணமாக நேரலை வீடியோவிலும் காட்சிகள் துல்லியமாக தெரியவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன. டொரக்கடேரோ என்ற இடத்தில் பிரபல அமெரிக்க பாப் பாடகி லேடி காகாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.. இதனைத் தொடர்ந்து வானவேடிக்கைகளுடன் கூடிய கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.      

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow