Raayan Movie Box Office Collection Day 1 : ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்போடு வெளியான தனுஷின் ராயன் திரைப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்பி வருகிறது. உலகம் முழுவதும் நேற்று ரிலீஸான இந்தப் படத்திற்கு ஓரளவு பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளது. ரஜினியின் பாட்ஷா படத்தை வெற்றிமாறன் ஸ்டைலில் பட்டி டிங்கரிங் பார்த்தால் எப்படி இருக்குமோ, அதுதான் ராயன் என பலரும் விமர்சனம் செய்திருந்தனர். அதேபோல், ராயன் ராவான கேங்ஸ்டர் ஜானர் மூவி என்றும் ரசிகர்கள் கூறி வருவதை பார்க்க முடிகிறது.
முக்கியமாக இந்தப் படத்தை இயக்கியுள்ள தனுஷ், தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், துஷாரா, சந்தீப் கிஷன், எஸ்ஜே சூர்யாவுக்கு ஸ்பேஸ் கொடுத்துள்ளதாக பாராட்டி வருகின்றனர். துஷாரா விஜயன் கேரியரில் ராயன் கண்டிப்பாக தரமான சம்பவமாக இருக்கும் என்றும், இந்தப் படம் அவருக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் எனவும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், தனது தம்பியாக நடித்துள்ள சந்தீப் கிஷன் கேரக்டருக்கும் தனுஷ் முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இது எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் ஒருத்தர் ராயன் படத்தில் இருக்கிறார் என்றால், அது இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தான் எனவும் ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர். படம் முழுக்க ஏஆர் ரஹ்மானின் பிஜிஎம் தாறுமாறாக உள்ளதாக பாராட்டுகள் குவிகின்றன. அதேபோல், ‘அடங்காத அசுரன்’ பாடலில் ‘உசுரே நீ தானே’ என ஹைப்பிச்சில் ஏஆர் ரஹ்மானின் குரல் ஒலிக்கும் நேரம், தியேட்டரே அதிர்கிறது. ரசிகர்கள் பலரும் இந்த காட்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
முதல் நாளில் ராயன் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவான விமர்சனங்களால், இன்றும், நாளையும் ஆன்லைன் புக்கிங்கில் 16,000 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. இதனால் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் ராயன் மாஸ் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. முன்னதாக முதல் நாளில் ராயன் படத்தின் கலெக்ஷன் 20 கோடி ரூபாய் வரை இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராயன் கலெக்ஷன் குறித்து படக்குழு தரப்பில் இருந்து அபிஸியலாக இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - அஜித், விக்ரம், விஜய் சேதுபதி வரிசையில் தனுஷ்
அதேநேரம் பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை வெளியிடும் சாக்னில்க் குழு, ராயன் திரைப்படம் முதல் நளில் 12.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது பெரும்பாலும் ஆன்லைன் புக்கிங் அடிப்படையில் மட்டும் தகவல்கள் வெளியிடுவதாக சொல்லப்படுகிறது. அதேபோல், இந்தியாவில் மட்டும் உள்ள வசூல் நிலவரம் என்றும் தெரிகிறது. ஆனால், உண்மையான வசூல் ரிப்போர்ட் 20 கோடிக்கும் அதிகமாக இருக்கவே வாய்ப்புள்ளதாம்.