Dhanush: அஜித், விக்ரம், விஜய் சேதுபதி வரிசையில் தனுஷ்… அட பாவமே விஜய் மட்டும் மிஸ்ஸிங்!

Tamil Movie Actors 50th Film Hit List 2024 : தனுஷின் ராயன் திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ராயன் வெற்றியை தொடர்ந்து, 50வது படத்தில் ஹிட் கொடுத்த ஹீரோக்கள் வரிசையில் தனுஷும் இணைந்தார்.

Jul 26, 2024 - 22:02
Jul 27, 2024 - 15:22
 0
Dhanush: அஜித், விக்ரம், விஜய் சேதுபதி வரிசையில் தனுஷ்… அட பாவமே விஜய் மட்டும் மிஸ்ஸிங்!
Tamil Movie Actors 50th Film Hit List 2024

Tamil Movie Actors 50th Film Hit List 2024 : தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். தனுஷ் ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான ராயன் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. அதனால், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் இத்திரைப்படம் மாஸ் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ராயன் படத்தின் வெற்றியால் அஜித், சீயான் விக்ரம், விஜய் சேதுபதி வரிசையில் தனுஷும் இணைந்துள்ளார். பொதுவாகவே மாஸ் ஹீரோக்களின் 25, 50, 100வது படங்கள் ஹிட் ஆவது ரொமபவே கடினமானது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் 100வது படமான ராகவேந்திரா, கமல்ஹாசனின் ராஜபார்வை ஆகிய படங்கள் சுமாரன வெற்றியைப் பெற்றது. இப்போதுள்ள ஹீரோக்கள் 50 படங்கள் தாண்டுவதே பெரிய விஷயம் தான். 

அப்படியிருக்க அஜித்தின் 50வது படமான மங்காத்தா ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. வெங்கட் பிரபு இயக்கிய இந்தப் படம், இப்போதும் அஜித் ரசிகர்களின் ஃபேவரைட் மூவியாக உள்ளத். அதேபோல், சீயான் விக்ரமின் ஐ திரைப்படமும் வெற்றிப் பெற்றது. விக்ரம் நடிப்பில் வெளியான 50வது படமான ஐ, ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த்து. அந்த வரிசையில் விஜய் சேதுபதியும் இணைந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளியான மகாராஜா ரசிகர்களின் வரவேற்போடு பிளாக் பஸ்டர் ஹிட்டனது. இதனையடுத்து தற்போது தனுஷ் தான் அந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளார். முக்கியமாக தனுஷின் 50வது படமான ராயனை தனுஷே இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது                                                                                                            

                                                                                                                                                                            ஆனால், இந்த லிஸ்ட்டில் தளபதி விஜய் இடம்பெறவில்லை. ஏனெனில் விஜய்யின் 50வது படமாக வெளியான சுறா படுதோல்வியை சந்தித்தது. இதனால் விஜய்யின் 50வது பட தோல்வியை குறிப்பிட்டு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில், தனுஷின் ராயன் இடைவேளை காட்சியில், விஜய்யின் தி கோட் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒளிபரப்பாகி வருகிது. இது விஜய், தனுஷ் என இருதரப்பு ரசிகர்களுக்கும் சர்ப்ரைஸ் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க - தனுஷின் ராயன் ட்விட்டர் விமர்சனம் 

இந்நிலையில், முதல் நாளில் ராயன் திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் தனுஷ் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடித் தீர்த்துள்ளனர். அதேபோல், பெங்களூரு, ஐதராபாத், கேரளாவின் திருவனந்தபுரம், கொச்சி ஆகிய பகுதிகளிலும் ராயனுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் முதல் நாளில் ராயன் வசூல் 20 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow