Raayan Review: தனுஷின் 50வது படம் சாதனையா சோதனையா..? ராயன் டிவிட்டர் விமர்சனம்!
Raayan Movie Twitter Review in Tamil : தனுஷ் இயக்கி நடித்துள்ள அவரது 50வது படமான ராயன், இன்று திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இப்படத்தின் முதல் காட்சி முடிந்துவிட்ட நிலையில், ரசிகர்களின் டிவிட்டர் விமர்சனம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.
Raayan Movie Twitter Review in Tamil : தனுஷின் 50வது படமான ராயன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். தனுஷுடன் எஸ்ஜே சூர்யா, அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ்ராஜ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், ராயன் படத்திற்கு முதல் ஆளாக பாசிட்டிவான விமர்சனம் கொடுத்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.
ராயன் பார்த்துவிட்டதாக ட்வீட்(Raayan Twitter Review) செய்துள்ள செல்வராகவன், “படம் அற்புதமாக உள்ளது, Mind Blowing தனுஷ், ஒவ்வொரு காட்சியிலும் நடிகராகவும் இயக்குநராகவும் மிளிர்வது அட்டகாசம். உன்னை நினைத்து பெருமையடைகிறேன் தம்பி. அனைத்து நடிகர்களும் நன்றாக நடித்துள்ளனர், ராயன் படத்தின் ஒட்டுமொத்த குழுவையும் நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். ஏஆர் ரஹ்மான் நம்மை புதிய உலகிற்கு அழைத்துச் செல்கிறார்” என பாராட்டியுள்ளார். ராயன் படத்திற்கான முதல் விமர்சனமாக செல்வராகவன் போட்டுள்ள ட்வீட், தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.
Watched "RAAYAN " SPELL BOUND and MIND BLOWING ! @dhaushkraja shines in every frame as an actor and director ! So so proud of you brother ! Loved all the actors performances ! @arrahman sir takes us to a different world ! So happy for the entire team ! — selvaraghavan (@selvaraghavan) July 26, 2024
அதேபோல், நெட்டிசன்களிடம் இருந்தும் ராயன் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. 2024ம் ஆண்டில் கோலிவுட்டின் சிறந்த படம் ராயன் என Let's X OTT GLOBAL என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. நடிகர், இயக்குநர் என இரண்டிலும் தனுஷ் பல விருதுகளை பெற தகுதியானவர். படம் முழுக்க ரத்தம் தெறிப்பதாகவும், முதல் பாதியை விட இரண்டாம் பாதி நன்றாக வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல் சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் ஆகியோரின் நடிப்பு தரமாக இருப்பதாகவும், ஏஆர் ரஹ்மானின் பின்னணி இசை ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், பாடல்களும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளன, ஒட்டுமொத்தமாக 5க்கு 4 ஸ்டார் வழங்கியுள்ளது Let's X OTT GLOBAL.
சோஷியல் மீடியா சினிமா ட்ராக்கர் ராயன் படத்துக்கு 3.75 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார். ராயன் வழக்கமான பழிவாங்கும் கதை தான் என்றாலும், தனுஷின் ரைட்டிங் & மேக்கிங் நன்றாக வந்துள்ளது. படத்தின் இடைவேளை காட்சியும், இரண்டாவது பாதியில் பல காட்சிகளும் தரமாக இருப்பதாகவும், கிளைமேக்ஸில் வரும் பாடல் தியேட்டர் மெட்டீரியல் என்றும் தெரிவித்துள்ளார். ஏஆர் ரஹ்மானின் இசை தான் படத்தின் ஆன்மா என குறிப்பிட்டுள்ள அவர், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா கேரக்டர் நன்றாக உள்ளன. விஷுவலாகவும் படம் சூப்பர், முக்கியமாக அடங்காத அசுரன் பாடல் தரம் என்றும் விமர்சனம் கொடுத்துள்ளார்.
அதேபோல், இன்னொரு சோஷியல் மீடியா சினிமா ட்ராக்கர் கிறிஸ்டோபர் கனகராஜ்ஜும் ராயன் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனம் கொடுத்துள்ளார். படத்தின் காஸ்டிங் & ஆக்டிங் இரண்டும் டாப் கிளாஸ் என பாராட்டியுள்ளார். தனுஷ் – எஸ்ஜே சூர்யா முதன்முறை சந்திக்கும் காட்சி சூப்பர் எனவும், ஏஆர் ரஹ்மானின் இசை, ஆக்ஷன் சீன்ஸ் தரமாக வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். முதல் பாதியில் அவ்வளவு வேகம் இல்லையென்றாலும், இரண்டாம் பாதி நன்றாக வந்துள்ளது. ஆனால், சில எமோஷனல் காட்சிகள் படத்துக்கு சரியாக செட்டாகவில்லை. ராயன் தியேட்டரிக்கல் எக்ஸ்பீரியன்ஸ் மூவி என விமர்சனம் கொடுத்துள்ளார்.
கோலிவுட் ஹீரோக்கள் யாரும் இப்படியொரு 50வது படம் கொடுத்திருக்க வாய்ப்பில்லை. தனுஷால் அனிருத் இல்லாமல் ஹிட் கொடுக்க முடியும் என்பதற்கு ராயன் ஒரு எடுத்துக்காட்டு. ஏஆர் ரஹ்மான் தான் இப்படத்தின் இரண்டாவது ஹீரோ என்றும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். அதேபோல், இதுவரை பார்க்காத ஒரு கிளைமேக்ஸ் சீனை ராயனில் பார்க்கலாம் எனவும், அதற்கு முன்பு வரும் பாடலும் தரமாக இருப்பதாகவும் நெட்டிசன்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர். முக்கியமாக முதல் பாதியை விட இரண்டாம் பாதி தான் வெறித்தனமாக இருப்பதாகவும் பாராட்டியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக ராயன் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. பெரும்பாலும் 3.75 முதல் 4 ஸ்டார் ரேட்டிங் கிடைத்துள்ளதால், ராயன் கன்ஃபார்மாக ப்ளாக்பஸ்டர் ஹிட் தான் சொல்லப்படுகிறது. தனுஷின் மேக்கிங், ஏஆர் ரஹ்மானின் பிஜிஎம் இந்த இரண்டும் தான் ராயன் படத்தின் கூஸ்பம்ஸ் சம்பவங்கள் எனவும் பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள். 50வது படத்தை தானே இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்து மெர்சல் காட்டியுள்ளார் தனுஷ்.
What's Your Reaction?