வந்தாச்சு பிப்ரவரி ரிப்போர்ட்.. பைக் விற்பனையில் டாப் 5 நிறுவனங்கள் எது?

கடந்த பிப்ரவரி மாதம் இருசக்கர வாகன (ஸ்கூட்டி உட்பட) விற்பனையில் முன்னணி வகித்த 5 நிறுவனங்களின் பட்டியல் இங்கே விவரிக்கப்பட்டுள்ளது.

Mar 15, 2025 - 17:19
Mar 15, 2025 - 17:40
 0
வந்தாச்சு பிப்ரவரி ரிப்போர்ட்.. பைக் விற்பனையில் டாப் 5 நிறுவனங்கள் எது?
Bike sales in february

மனிதர்களுக்கான றெக்கை என்றால் அது பைக் தான். அந்த வகையில் கடந்த பிப்.,2025-ல் எந்த நிறுவனத்தின் பைக்குகள் அதிகம் விற்பனையாகி உள்ளன என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு-

ஹோண்டா: (Honda)

ஆக்டிவா, புதிய ஹார்னெட் மற்றும் பிற ஹோண்டா மாடல்களில் அதி நவீன வசதி என அடுத்தடுத்து புதிய அப்டேட்டுகளை கொடுத்து பைக் விற்பனையில் அசத்தி முதலிடத்தை பிடித்துள்ளது ஹோண்டா நிறுவனம். பிப்ரவரி 2025-ல் மட்டும் ஹோண்டா நிறுவனம் 3,83,918 பைக்குகளை விற்றுள்ளது. கடந்த ஆண்டு (2024) இதே பிப்ரவரி மாதக்காலத்தில் 4,13,967 பைக் யூனிட்களை விற்றுள்ளது. விற்பனை விகிதம் என கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் மைனஸ் நோக்கி (-7.2%) செல்கிறது. இருந்தாலும், தற்போது பைக் விற்பனையில் டாப் 5 நிறுவனங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப்: (Hero MotoCorp)

பிப்ரவரி 2025-ல் ஹீரோ நிறுவனம் தான் வகித்து வந்த முதல் இடத்தை இழந்துள்ளது. பிப்ரவரி 2024-ல் 4,45,095 பைக் யூனிட்களை விற்பனை செய்த நிலையில், இந்த ஆண்டு (பிப்ரவரி மாதம்) 3,57,296 பைக் யூனிட்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இருப்பினும், புதிய எக்ஸ்ட்ரீம் 250 மற்றும் எக்ஸ்பல்ஸ் 210 உள்ளிட்ட புதிய வெளியீடுகள் சந்தையில் நல்ல மதிப்பை பெற்றுள்ள நிலையில், மார்ச் மாத விற்பனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விற்பனையின் வீழ்ச்சி சதவீதம் கடந்தாண்டுடன் ஒப்பீடுகையில் -19.7% ஆகும்.

டிவிஎஸ்: (TVS)

டிவிஎஸ் நிறுவனம் 2,76,072- பைக் யூனிட்களை விற்பனை செய்து டாப் 5 பட்டியலில் மூன்றாவது இடத்தினை பெற்றுள்ளது. டிவிஎஸ் நிறுவனம் பிப்ரவரி 2024-ல் 2,67,502 பைக் யூனிட்களை விற்பனை செய்த நிலையில் நடப்பாண்டு விற்பனையில் 3.2% வளர்ச்சி கண்டுள்ளது. டிவிஎஸ்ஸைப் பொறுத்தவரை, ஜூபிடர் தான் அதிகம் விற்பனையாகும் பைக் மாடல். குடும்பமாக பயணிக்க விரும்புவோரை கவர்ந்திழுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது தான் ஜூபிடர் மாடலின் ஸ்பெஷல் எனலாம். மோட்டார் சைக்கிள் பிரிவில் ஹீரோ, ஹோண்டா மற்றும் பஜாஜ் ஆகிய நிறுவனங்களுடன் டிவிஎஸ் கடுமையாக போட்டி போடும் சூழ்நிலை தான் நீடிக்கிறது.

Read more: போலீஸை கண்டதும் லஞ்சம் வாங்கிய பணத்தோடு குளத்தில் குதித்த விஏஓ.. அப்புறம் என்னாச்சு?

பஜாஜ்: (Bajaj) 

புனேவை மையமாக கொண்டு இரு சக்கர வாகன தயாரிப்பில் அசத்தி வருகிறது பஜாஜ் நிறுவனம். டாப் 5 பட்டியலில் பஜாஜ் நிறுவனம் இடம்பெற இதன் பல்சர் மாடல்கள் பெரிதும் உதவியுள்ளது.  EV பிரிவில் பஜாஜ் சேடக் மாடல் முன்னணி வகிக்கிறது. பஜாஜ் டேக், ட்ரையம்ப் மற்றும் KTM என தொடர்ந்து இளைஞர்களை குறிவைத்து பைக் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பஜாஜ் நிறுவனம் சர்வதேச சந்தைகளிலும் நல்ல கவனத்தை பெற்றுள்ளதால் வரும் மாதங்களில் இதன் விற்பனை அதிகரிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 4-வது இடத்திலுள்ள பஜாஜ் நிறுவனம் இந்தாண்டு பிப்ரவரி மாதம் 1,46,138 பைக் யூனிட்களை விற்றுள்ளது. இது கடந்தாண்டு பிப்ரவரி மாத விற்பனையுடன் (1,68,727) ஒப்பிடுகையில் -13.3% வீழ்ச்சியாகும்.

ராயல் என்ஃபீல்ட்: (Royal Enfield)

புகழ்பெற்ற ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் பிப்ரவரி மாதம் அதிக பைக் விற்ற நிறுவனங்களின் பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. டிவிஎஸ் நிறுவனத்திற்குப் பிறகு இந்த டாப் 5 பட்டியலில் பாஸிட்டிவ் வளர்ச்சிப் பாதையில் செல்லும் நிறுவனம் ராயல் என்ஃபீல்ட் மட்டுமே. ராயல் என்ஃபீல்ட் கடந்த மாதம் 80,799 பைக் யூனிட்டுகளை விற்றுள்ளது. கடந்தாண்டு பிப்ரவரி மாத விற்பனையுடன் (67,922 பைக் யூனிட்) ஒப்பீடுகையில் 18.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மற்ற நிறுவனங்கள் போல், பைக் விலையில் கொஞ்சம் இறங்கி வந்தால் விற்பனையில் அனைத்து நிறுவனங்களையும் தூக்கி சாப்பிட்டுவிடும் என்கிறார்கள் சந்தை மதிப்பீட்டாளர்கள்.

Read more: குடிசை வீடு.. அப்பாவுக்கு யானைக்கால் நோய்.. பள்ளி மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய தஞ்சை MP

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow