IPL 2025: விசில் போடு.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு மெட்ரோவில் இலவச பயணம்..!

ஐ.பி.எல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே அணி விளையாடும் போட்டிகளுக்கு ரசிகர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் சி.எஸ்.கே அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Mar 15, 2025 - 17:26
Mar 15, 2025 - 18:16
 0
IPL 2025: விசில் போடு.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு மெட்ரோவில் இலவச பயணம்..!
சிஎஸ்கே ரசிகர்களுக்கு மெட்ரோவில் இலவச பயணம்

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் போது, ரசிகர்களுக்காக  மெட்ரோ சேவைகளை வழங்க சென்னைசூப்பர் கிங்ஸுடன் இணைந்து இலவச பயணத்தை வழங்குதாக அறிவித்துள்ளது. 

சென்னை போட்டிகள்

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் மார்ச் 23 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே நிர்வாகம் ரசிகர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் 2025 போட்டிகளுக்கு வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

Read More: தமிழக வேளாண் பட்ஜெட்.. 45 ஆயிரத்து 661 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு..!

சிஎஸ்கே நிர்வாகத்தின் இந்த முயற்சியானது, ஸ்பான்சர் செய்யப்பட்ட இலவச மெட்ரோ பயணத்தை ரசிகர்களுக்கு வழங்குவதன் மூலம், போட்டி நடைபெறும் அன்றைய ரசிகர்களுக்கான பயண அனுபவத்தையும்  மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதையும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சென்னையில் CSK போட்டி நடைபெறும் அனைத்து நாட்களிலும் மெட்ரோ இரயில் சேவைகளை இரவு நீட்டிப்பதுடன், பார்வையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்தை வழங்குகிறது.

இலவச பயணம்

ஸ்பான்சர் செய்யப்பட்ட IPL போட்டிகான பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் எந்த மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம், மெட்ரோஇரயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ இரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம். விளையாட்டுப் போட்டி நடைபெறும் நாட்களில், பயணிகளின் தேவையைப் பொறுத்து, போட்டிமுடிந்த பிறகு மெட்ரோ இரயில் சேவை 90 நிமிடங்கள் வரை அல்லது அதிகபட்சமாக நள்ளிரவு 1:00 மணிவரை நீட்டிக்கப்படும். ஒவ்வொரு போட்டி நாளுக்கு முன்பும் கடைசி மெட்ரோ இரயில் புறப்படும் நேரம் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மூலம் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும்,  பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் இலவச  பயண வசதிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவுத்தியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow