தமிழக வேளாண் பட்ஜெட்.. 45 ஆயிரத்து 661 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு..!

தமிழ சட்டப்பேரவையில் 45 ஆயிரத்து 661 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 2025-26 ஆம் ஆண்டிற்கான தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

Mar 15, 2025 - 15:25
 0
தமிழக வேளாண் பட்ஜெட்.. 45 ஆயிரத்து 661 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு..!
தமிழக வேளாண் பட்ஜெட்.. 45 ஆயிரத்து 661 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு..!

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர், நேற்று பட்ஜெட் தாக்கலோடு தொடங்கியது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தா. இன்று, சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஐந்தாவது முறையாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 45 ஆயிரத்து 661 கோடி ரூபாய் மதிப்பில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட்டில் 1000 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் நிறுவிட 42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, சாகுபடி பரப்பை அதிகரிக்க டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு 102 கோடி ரூபாயும், டெல்டா மாவட்டங்களுக்கு 58 கோடி ரூபாயில் நிதி ஒதுக்கீட்டில் சிறப்பு தொகுப்பு திட்டம்,  3 லட்சம் ஏக்கரில் கோடை உழவை ஊக்குவித்திட  ஹெக்டேருக்கு 2ஆயிரம் வீதம் 24 கோடி நிதி ஒதுக்கீடு,  63 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில் மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டத்துக்கு 22 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு ஆகியவை அறிவிக்கப்பட்டது.

மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் இழப்பீடு மற்றும் நிதி உதவி அதிகரிப்பு, முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்துக்கு 142 கோடி ஒதுக்கீடு, பருத்தி உற்பத்தி பெருக்குத் திட்டம் செயல்படுத்திட 12 கோடியே 21 லட்சம் நிதி ஒதுக்கீடு மற்றும் பயிர் காப்பீட்டு திட்டம் செயல்ப்டுத்த 841 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாங்க 17ஆயிரம் உழவர்களுக்கு 215கோடியே 80 லட்சம் மானியம், வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி ரூ.1கோடி வழங்குவது, உழவர்களின் குறுகிய காலக் கடன் தேவைகளுக்கு 3ஆயிரம் கோடி மூல தனக்கடன், உழவர்களுக்கு இலவச மின் இணைப்புகளுக்கான கட்டணத் தொகையாக 8ஆயிரத்து 186 கோடி நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

Read More: லஞ்சம் பெற்ற வழக்கு: மாவட்ட வருவாய் அலுவலருக்கு 5 ஆண்டுகள் சிறை..!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow