புதிதாக களமிறங்கும் 4 பைக்குகள்.. விலையில் கெத்து காட்டும் பிரிக்ஸ்டன் நிறுவனம் ..!

ஆஸ்திரியாவைச் சேர்ந்த பிரிக்ஸ்டன் நிறுவனம் இந்தியாவில் தங்களது நான்கு புதிய பைக்குகளை அதிரடியாக களமிறக்குகிறது. ஏற்கனவே முன்பதிவை தொடங்கிய நிலையில், ஜனவரி மாதம் புதிய பைக்குகள் விற்பனைக்காக சந்தைக்கு வருகிறது. 

Nov 20, 2024 - 00:36
Nov 20, 2024 - 00:55
 0
புதிதாக களமிறங்கும்  4 பைக்குகள்.. விலையில் கெத்து காட்டும் பிரிக்ஸ்டன் நிறுவனம் ..!
புதிதாக களமிறங்கும் 4 பைக்குகள்.. விலையில் கெத்து காட்டும் பிரிக்ஸ்டன் நிறுவனம் ..!

பிரிக்ஸ்டன் நிறுவன பைக்குகள் இந்தியாவிலேயே உற்பத்தியாகும் வகையில் புதிதாக களமிறங்குகிறது.  இந்த புதிய பைக்குகளின் விலை ரூ. 4.74 லட்சம் முதல் ரூ.7.83 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காரின் விலைக்கு நிகராக விற்பனைக்கு வந்துள்ளது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  அப்படி இந்த பைக்கில் என்ன இருக்கிறது என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

பிரிக்ஸ்டன் மோட்டார் சைக்கிள்கள் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் பகுதியை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆஸ்திரிய மோட்டார்சைக்கிள் பிராண்ட் கிராஸ்ஃபயர் 500X மற்றும் 500 XC எனப்படும் இரண்டு 500 cc மாடல்களையும், Cromwell 1200 மற்றும் Cromwell 1200X எனப்படும் இரண்டு 1200 cc பைக்குகள் என மொத்தம் 4 புதிய மாடல்களில் பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை அனைத்திலும், பிரிக்ஸ்டனின் சிறப்பியல்பான நியோ-ரெட்ரோ வடிவமைப்பு பிராதானமாக உள்ளது.

பிரிக்ஸ்டன் கிராஸ்ஃபயர் 500 எக்ஸ் பைக்கை பொறுத்தவரை, ஒரு நியோ ரெட்ரோ கபே ரேஸர் ஸ்டைல் பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு வகைகளும் 47.6 பி எச்பி மற்றும் 47 என்எம் டார்க்கை உருவாக்கும் 486 சிசி இன்லைன் டூ-சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இதில் ஷார்ப் மற்றும் சிலிக்கான் டிசைன் பின்பற்றப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 486 சிசி லிக்யூட் கூல்டு ட்வின் சிலிண்டர் இன்ஜின்ன் பொருத்தப்பட்டுள்ளது.

இது 47.85 பிஎஸ் பவரையும் 43 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் முன்பக்கம் தலைகீழாக பொருத்தப்பட்ட ஃபோர்க்கும் பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. இது ஃப்ரீ லோடு மற்றும் ரீபவுண்டு அட்ஜஸ்டபிள் ஆப்ஷன் உடன் இருக்கிறது.

இந்த இருசக்கர வாகனத்தில் 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 320 மிமீ டிஸ்க் பிரேக் முன்பக்கமும் 240மிமீ டிஸ்க் பிரேக் பின்பக்கமும் வழங்கப்பட்டுள்ளது.  இரண்டு மாடல்களிலும் மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும். உரிமைகோரப்பட்ட எரிபொருள் நுகர்வு புள்ளிவிவரங்கள் 25 kmpl என மதிப்பிடப்பட்டுள்ளது.

க்ரோம்வெல் 1200 நியோ-ரெட்ரோ ரோட்ஸ்டராக உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டுமே 81.8 பிஎச்பி மற்றும் 108 என்எம் டார்க்கை வழங்கும் 1,222சிசி லிக்விட்-கூல்டு, ட்வின்-சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த யூனிட் ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் 198 கிமீ வேகத்தில் செல்லும். பிரிக்ஸ்டன் எரிபொருள் நுகர்வு புள்ளிவிவரங்களை 21.7 kmpl என மதிப்பிட்டுள்ளது.

Brixton Crossfire 500 வரம்பின் விலைகள் Crossfire 500Xக்கு ரூ. 4,74,100 மற்றும் Crossfire 500 XCக்கு ரூ. 5,19,4000 . பிரிக்ஸ்டன் க்ராம்வெல் 1200  ரூ. 7,83,899 விற்பனைக்கு வருகிறது.  க்ரோம்வெல் 1200X க்கு ரூ 9,10,600 முதல் தொடங்குகிறது. நான்கு பைக்குகளின் சந்தை விற்பனை ஜனவரி 2025 இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow