புதிய அப்டேட்டுடன் வெளியான அப்பாச்சி RTR 160 4V.. விலை எவ்வளவு தெரியுமா?

டாப் வேரியண்ட் கொண்ட அப்பாச்சி RTR 160 4V இரு சக்கர வாகனத்தை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Nov 21, 2024 - 03:28
Nov 21, 2024 - 03:28
 0
புதிய அப்டேட்டுடன் வெளியான அப்பாச்சி RTR 160 4V.. விலை எவ்வளவு தெரியுமா?
புதிய அப்டேட்டுடன் வெளியான அப்பாச்சி RTR 160 4V.. விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் பிரபல நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் கம்பெனி அப்பாச்சி RTR 160 4V இருசக்கர வாகனத்தில் சில புதிய அப்டேட்டுகளை செய்துள்ளது. டாப் வேரியண்ட் கொண்ட இந்த அப்பாச்சி RTR 160 4V-ஆனது  நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய வேரிண்டின் முன்பக்கம்  அப்ஸைடு டவுன்  ஃபோர்க் (USD) சஸ்பென்ஷன் செட்டப்புடன் கொடுக்கப்பட்டுள்ளது. கோல்டன் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த வசதியானது இருசக்கர வாகனத்தை சிறப்பாக காட்டுகிறது.

இந்த இரு சக்கர வாகனத்தில் அர்பன், ரெயின் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய மூன்று ட்ரைவிங் மோடுகள்  உள்ளன. மேலும்,  இதில், 159.7 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 

நான்கு வால்வு கொண்ட இந்த இன்ஜினானது   அர்பன் மற்றும் ரெயின் மோட்களில் 15.64 பிஎஸ் பவரையும், 14.14 என்எம் அதிகபட்ச டார்க்கையும் உருவாக்குகிறது. அதே நேரத்தில், ஸ்போர்ட் மோடில் 17.55 பிஎஸ் பவரையும் 14.73 என்எம் அதிகபட்ச டார்க்கையும் உருவாக்குகிறது.

இந்த பைக்கின் டாப் ஸ்பீடு அர்பன் மற்றும் ரெயின் மோடில் 103 கிமீ வேகத்திலும், ஸ்போர்ட் மோடில் 114 கிமீ வேகத்திலும் செல்லும். மேலும், இந்த இரு சக்கர வாகனத்தில் டார்ன் பை டார்ன் நேவிகேஷன் (turn-by-turn navigation), குறுஞ்செய்திகள், தொலைப்பேசி அழைப்புகள் வந்தால் எச்சரிப்பது போன்ற அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த புதிய வேரியண்ட்டில்  மூன்று புதிய வண்ண விருப்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் Granite Gray, Matte Black மற்றும் Pearl White ஆகியவை அடங்கும். இது தவிர,  இருசக்கர வாகனத்திற்கு  ஸ்போர்ட்டி தோற்றத்தை வழங்க red color alloy wheels, race-inspired graphics ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இந்த இரு சக்கர வாகனத்தின் விலை ஒரு லட்சத்து நாற்பதாயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow