நீங்க கார்களை விற்பனை செய்கிறீர்களா..? எலான் மஸ்க் கேள்விக்கு அதிரடி பதிலளித்த நிறுவனம்
உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஜாக்குவார் புதிய லோகோவை வெளியிட்டுள்ளது.
பிரிட்டிஸ் சொகுசு வாகன தயாரிப்பு நிறுவனமான ஜாக்குவார் உலகின் முதன்மையான நிறுவனமாக இருந்து வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்தினாலே சமூகத்தில் மரியாதை கிடைக்கும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் மக்கள் பலர் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை விரும்பி வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில், ஜாக்குவார் நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இதற்காக அந்நிறுவனம் தன்னை தயார்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தங்களின் அடையாளத்தை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதன்படி, ஜாக்குவார் நிறுவனம் அதன் லோகோவில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அடிப்படை அடையாளங்களை மாற்றாமல் புதுமையான லுக்கில் புதிய லோகோவை வெளியிட்டுள்ளது. பார்ப்பதற்கு தங்க நிறத்தில் இருக்கும் இந்த லோகோவில் ஜாக்குவார் மிருகமும் இடம்பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தில் தனிச்சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் இந்த லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஜாக்குவார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜே என்ற வார்த்தையை வைத்து வட்டமான ஒரு லோகோவும் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது பலரை ஆச்சிரியத்திலும், குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்த லோகோ குறித்து தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் எலான் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில், நீங்கள் கார்களை விற்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ஜாக்குவார் நிறுவனம், ஆமாம், கார்களை தான் விற்கிறோம். அதை உங்களிடம் காண்பிக்க ஆசைப்படுகிறோம். டிசம்பர் 2-ஆம் தேதி மியாமியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம் என்று பதிலளித்துள்ளனர்.
ஜாகுவார் நிறுவனம் தங்களது முதல் எலக்ட்ரிக் காரை வரும் டிசம்பர் 2-ம் தேதி சர்வதேச அளவில் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதில் பல்வேறு அப்டேட்கள் இடம் பெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?