தமிழக வேளாண் பட்ஜெட்டில் முந்திரி விவசாயிகளுக்கு சிறப்பு அறிவிப்பு!
முந்திரி மற்றும் பனை சார்ந்த தொழிலில் ஈடுபடுவர்களுக்கு பட்ஜெட்டில் சிறப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை நேற்றையத் தினம் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து இன்றையத் தினம் வேளாண் பட்ஜெட்டினை தாக்கல் செய்து வரும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன் விவரம் பின்வருமாறு-
விவசாயிகள் நிலையான வருமானம் ஈட்டும் வகையில் மலர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.8.51 கோடி ஒதுக்கீடு. வெங்காயத்தின் விளைச்சல் குறையும் காலங்களில் சந்தைக்கு நிலையான வரத்தினை உறுதிப்படுத்திடும் பொருட்டு வெங்காய சேமிப்புக்கூடங்கள் அமைக்க ரூ.18 கோடி ஒதுக்கீடு. மல்லிக்கைக்கான சிறப்புத் திட்டத்தின் கீழ் பாரம்பரிய மலரான மல்லிகை சாகுபடியை அதிகரிக்க ரூ.1.60 கோடி ஒதுக்கீடு.
நறுமண ரோஜாவிற்கான சிறப்புத் திட்டத்தின் கீழ், உதிரி வகை ரோஜா மலர்களின் சாகுபடி 500 ஏக்க்கரில் மேற்கொள்ள ரூ.1 கோடி ஒதுக்கீடு. சுவைதாளிதப் பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்கவும், இராமநாதபுரம்,தூத்துக்குடி,விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் 2,500 ஏக்கரில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடியை மேற்கொள்ளவும் ரூ.11.74 கோடி ஒதுக்கீடு.
தமிழ்நாடு முந்திரி வாரியம்:
முந்திரியின் பரப்பு, உற்பத்தி அதிகரிக்கவும்,முந்திரி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும், முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனை பாதுக்காக்கவு ரூ.10 கோடி ஒதுக்கீடு. பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பனைமரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்,பனை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கவும் ரூ.1.65 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தமிழக வேளாண் பட்ஜெட்டில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பலா மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் புதிய பலா இரகங்களை பரவலாக்கவும், பலாவில் ஊடுபயிர் சாகுபடியை மேற்கொள்ளவும், பலா மதிப்புக் கூட்டுதலுக்கான பயிற்சி வழங்கவும் ரூ.5 கோடி ஒதுக்கீடு. ஊட்டச்சத்துள்ள வெண்ணைப்பழ சாகுபடியை தென்காசி, திண்டுக்கல், தேனி,கள்ளக்குறிச்சி, நீலகிரி, சேலம் மாவட்டங்களில் 500 ஏக்கரில் ஊக்குவிக்க ரூ.69 இலட்சம் ஒதுக்கீடு.
What's Your Reaction?






