கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்வு- வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 முன்னோடி உழவர்கள் அழைத்து செல்லப்படுவார்கள் என வேளாண் பட்ஜெட்டில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை டன்னுக்கு ரூ.349 ஆக அதிகரிக்கப்படுவதாக வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை நேற்றையத் தினம் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து இன்றையத் தினம் வேளாண் பட்ஜெட்டினை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளார்.
இந்திய அளவில் வேளாண் துறையில் தமிழகம் 2 ஆம் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு 151 லட்சம் ஹெக்டராக உயர்ந்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.வேளாண் பட்ஜெட் அறிவிப்பினை முன்னிட்டு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பச்சை துண்டு அணிந்து சட்டப்பேரவைக்கு வருகைத்தந்துள்ளனர்.
கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்வு:
கரும்புக்கான ஊக்கத் தொகை, ரூ. 215-ல் இருந்து ரூ. 349 ஆக உயர்வு. கரும்பு டன் ஒன்றுக்கு 3500 வழங்கப்படும். இதற்காக ரூ.297 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் அமைச்சர் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். 7 அரசு விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை அறிவிக்கப்படும். மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு ரூ.142 கோடி ஒதுக்கீடு. ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.35.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து வேளாண்மை திட்டத்திற்கு ரூ.125 கோடி ஒதுக்கீடு. 50 லட்சம் ஏக்கரில் துவரை சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படும்.
பழச் செடி தொகுப்பு 9 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். பயிர் வகை விதை தொகுப்பு 1 லட்சம் இல்லங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். புரதச்சத்து நிரைந்த காளாண் உற்பத்தியை ஊக்குவிக்க ஊரக பகுதியில் 5 காளாண் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும். ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 முன்னோடி உழவர்கள் அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு செயல்படுத்தப்படும் வேளாண் தொழில் நுட்பத்தை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
What's Your Reaction?






