டாஸ்மாக் மூலம் 40,000 கோடி ஊழல்? பட்ஜெட் உரை வெளிநடப்பு குறித்து EPS பேட்டி
டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக கிட்டத்தட்ட 40,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிக்குமோ என்று சந்தேகம் எழுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய தொடங்கிய போது அதிமுகவினர் அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அறிக்கையினை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அதிமுகவினர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பும் செய்தனர். இதுத்தொடர்பாக தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் பத்திரிகையாளர்களை சந்தித்து தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு-
”நேற்றைய தினம், ஒரு செய்தி பத்திரிக்கையிலும் ஊடகங்களிலும் வந்துள்ளன, அமலாக்கத்துறை ஒரு செய்தியை வெளியிட்டது, அதில் 1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விசாரணை முழுமையாக முடிவடைகின்ற பொழுது, டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக கிட்டத்தட்ட 40,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிக்குமோ என்று சந்தேகம் எழுகின்றது.
இந்த அரசு அதைப்பற்றி எந்த ஒரு செய்தியும் இதுவரை வெளியிடவில்லை. அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி , அந்த ரெய்டு மூலமாக 1000கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டும், இந்த அரசு எந்த செய்தியும் வெளியிடப்படாத காரணத்தினால், அதை நாங்கள் சட்டமன்றத்திலே குறிப்பிட்டு இதற்கு தார்மீக பொறுப்பேற்று இந்த திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தி வெளிநடப்பு செய்திருக்கிறோம்.” என குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம், ஒரு செய்தி பத்திரிக்கையிலும் ஊடகங்களிலும் வந்துள்ளன, அமலாக்கத்துறை ஒரு செய்தியை வெளியிட்டது, அதில் 1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளன.
விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விசாரணை முழுமையாக முடிவடைகின்ற பொழுது,
டாஸ்மாக்… pic.twitter.com/9pvvgaAmSa — Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) March 14, 2025
அமலாக்கத்துறை வெளியிட்ட தகவல் என்ன?
முன்னதாக நேற்று அமலாக்கத்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ”(டாஸ்மாக்) மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள்/நபர்கள் தொடர்பான இடங்களில் பல்வேறு குற்றங்களுக்காக, (2002 பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) விதிகளின் கீழ்) 06.03.2025 அன்று, அமலாக்க இயக்குனரகம் (ED) சோதனை நடவடிக்கைகளை நடத்தியது.
ஊழல் தடுப்புச் சட்டம், 1988 இன் பல்வேறு பிரிவுகளின் கீழ் டாஸ்மாக் மீது பதிவு செய்யப்பட்ட பல குற்றப்பத்திரிக்கைகளின் அடிப்படையில் ED விசாரணையைத் தொடங்கியது. குற்றப்பத்திரிக்கை விவரம்: (i) டாஸ்மாக் கடைகள் உண்மையான MRP விலையை விட அதிகமாக வசூலித்தது; (ii) சப்ளை ஆர்டர்களுக்காக டாஸ்மாக் அதிகாரிகளுக்கு சில நிறுவனங்கள் சாதகமாக நடந்துக் கொண்டது; (iii) டாஸ்மாக் மூத்த அதிகாரிகள் சில்லறை டாஸ்மாக் கடைகளில் இருந்து லஞ்சம் வசூலிப்பது மற்றும் டாஸ்மாக் ஊழியர்களை இடமாற்றம் செய்தல் மற்றும் பணியமர்த்துவதற்கு பணம் பெறுதல் போன்றவையும் அடங்கும் “ என குறிப்பிட்டு இருந்தது.
Read more: தமிழக பட்ஜெட் 2025: அமளியில் ஈடுபட்ட அதிமுக.. அதிரடி வெளிநடப்பு
What's Your Reaction?






