அதிமுக ஆலோசனை கூட்டத்தை தவிர்த்த செங்கோட்டையன் -சபாநாயகர் அறையில் அமர்ந்ததால் பரபரப்பு
தலைமைச் செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில், முன்னதாக நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவிர்த்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025-2026ம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். வேளாண் பட்ஜெட்டை தொடர்ந்து அமைச்சர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் பச்சை துண்டோடு சட்டப்பேரவையில் அமர்ந்துள்ளனர்.
வேளாண் துறையுடன் கால்நடைத்துறை மற்றும் மீன்வளத்துறைக்கான ஒதுக்கீடுகள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், தமிழக பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் என இரு பட்ஜெட்டுகளுக்கு முன்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
Read more: தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் - பச்சை துண்டுடன் அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏக்கள் வருகை
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அறைக்கு வராமல் சபாநாயகர் அறையில் அமர்ந்து பின்பு பேரவைக்குள் வந்துள்ளார் செங்கோட்டையன். நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தையும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் தவிர்த்ததாக கூறப்படும் நிலையில், இன்றும் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு சட்டப்பேரவைக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார். இபிஎஸ்க்கான பாராட்டு விழாவில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் தவிர்க்கப்பட்டதை தான் ஏற்கவில்லை என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து இபிஎஸ் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் செங்கோட்டையன் பங்கேற்பதை தவிர்த்து வருவது அரசியலில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மனநிலையில் செங்கோட்டையன் இருப்பதால் தான் இபிஎஸ் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை செங்கோட்டையன் தவிர்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read more: வேளாண் பட்ஜெட்: வேளாண் துறையில் தமிழகத்திற்கு இரண்டாம் இடம்- எம்.ஆர்.கே பெருமிதம்!
What's Your Reaction?






