வேளாண் பட்ஜெட்: வேளாண் துறையில் தமிழகத்திற்கு இரண்டாம் இடம்- எம்.ஆர்.கே பெருமிதம்!
வேளாண் பட்ஜெட் அறிவிப்பினை முன்னிட்டு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பச்சை துண்டு அணிந்து சட்டப்பேரவைக்கு வருகைத் தந்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை நேற்றையத் தினம் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து இன்றையத் தினம் வேளாண் பட்ஜெட்டினை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளார்.
இந்திய அளவில் வேளாண் துறையில் தமிழகம் 2 ஆம் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு 151 லட்சம் ஹெக்டராக உயர்ந்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த நிதியாண்டில் 172 வேளாண் விற்பனைக்கூடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு 1.81 லட்சம் பாசன மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 16.3 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்கள் பயிரடப்பட்டுள்ளன.30 லட்சம் உழவர்களுக்கு பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.1,631 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.510 கோடியில் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
What's Your Reaction?






