936 இடங்களில் நேரலை – அதிகரிக்கும் தமிழக பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு
மார்ச் 15ம் தேதி (சனிக்கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் வேளாண் நிதிநிலை அறிக்கையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் எல்.இ.டி. திரையின் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

2025-26ம் ஆண்டு தமிழ்நாடு பட்ஜெட்டானது மாநிலம் முழுவதும் 936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையினை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் 100 இடங்களிலும், ஏனைய 24 மாநகராட்சி பகுதிகளில் 48 இடங்களிலும், 137 நகராட்சி பகுதிகளில் 274 இடங்களிலும் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பேரூராட்சிகளில் 425 இடங்களிலும் என மொத்தம் 936 இடங்களில் நாளை ( மார்ச்.14ம் தேதி) அன்று காலை 9.30 மணி முதல் ஒளிபரப்பப்படுகிறது.
வேளாண் நிதிநிலை அறிக்கை
மேலும், 15.03.2025 (சனிக்கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் வேளாண் நிதிநிலை அறிக்கையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் எல்.இ.டி. திரையின் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
சென்னையில் எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள், முரசொலி மாறன் பூங்கா, அண்ணா நகர் டவர் பார்க், கோயம்பேடு பேருந்து நிலையம், வள்ளுவர் கோட்டம், கத்திப்பாரா பார்க், மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம் கடற்கரை பகுதிகள் உள்ளிட்ட 100 இடங்களில் பட்ஜெட் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
நேரலை ஏற்பாடுகள்
தமிழக பட்ஜெட் நேரடி ஒளிபரப்புக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், பட்ஜெட் மீது பொதுமக்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. அத்துடன் அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாகவே இருக்கும் என்பதால், 16வது சட்டப்பேரவைக் காலத்தில் திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் இறுதி மற்றும் முழுமையான பட்ஜெட் இதுவாகும். எனவே இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இருக்கும் என பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
Read more : திடீரென பெய்த கனமழை..நெற்பயிற்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை..!
What's Your Reaction?






