திடீரென பெய்த கனமழை..நெற்பயிற்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை..!

அரியலூரில் கடந்த இரு தினங்கள் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் நீரில் சாய்ந்து சேதமடைந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

Mar 13, 2025 - 16:51
 0
திடீரென பெய்த கனமழை..நெற்பயிற்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை..!

அரியலூர் மாவட்டம் காவிரியின் கொள்ளிடக்கரையோட பகுதி என்பதால், இதனை டெல்டா பகுதி என்றே அழைக்கிறோம். அரியலூர் மாவட்டம் முழுவதும் விவசாயம் என்பதே பிராதன தொழிலாக உள்ளது. குறிப்பாக நெற் சாகுபடி அதிகளவில் செய்யப்படும் பகுதியாகும். 

Read More:சுதந்திர போராட்ட தியாகிகள் நிலத்தில் மருத்துவக் கழிவு.. ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு..!

ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற் சாகுபடி செய்யப்பட்டு வரும் சூழலில், கடந்த 2 தினங்களாக பெய்துவரும் கனமழையினால், அறுவடைக்கு நெற்பயிற்கள் மழைநீரில் மூழ்கி முற்றிலும் சேதமடைந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக பயிரிடப்பட்டு வந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால், வேதனையடைந்துள்ள விவசாயிகள் அரசு காப்பீடு தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என்றும், பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதி டெல்டா பகுதியாகும். மாவட்டத்தில் கடந்த இரு தினங்களில் 337 மி.மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதில் புள்ளம்பாடி பாசன வாய்க்கால்களில பயன் பெறும் கரைவெட்டி, பரதூர், கோவில் எசனை, வெங்கனூர் ஆகிய பகுதிகளில்  5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி உள்ளது.

இதில் சம்பா சாகுபடியில் கோ 51, சி.ஆர் 1009, அம்மன் பொன்னி ஆகிய ரக  பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு  அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் கடந்த இரு தினங்கள்‌ பெய்த மழையின் காரணமாக பயிர்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது.

ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மழை நீர் சூழ்ந்து முளைக்கும் தருவாயில் உள்ளது.  இதனால் ஏக்கருக்கு 40 ஆயிரம்‌ செலவு செய்த நிலையில்  திடீர் மழையால் பயிர்கள் சேதமடைந்துள்ளது.2

Read More:நீலகிரியில் தொடரும் சோகம்.. சிறுத்தை தாக்கியதில் பெண்மணி உயிரிழப்பு!

இரண்டு நாட்களாக பெய்த மழையால், வயலில் இறங்கி வேலை பார்க்காத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரம் கடந்து தான் வயலில் இறங்கி, பயிரை அறுவடை செய்ய முடியும் என்பதால், நெல்மணிகள்  வயலிலே கொட்டிவிடும் சூழ்நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தங்களுக்கு அதிகாரிகள் உடனடியாக கணக்கீடு செய்து பயிர் காப்பீடு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வேதனையுடன்‌ கோரிக்கை வைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow