தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் - பச்சை துண்டுடன் அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏக்கள் வருகை
தமிழ்நாடு சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

2025-26ம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
தமிழ்நாடு சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று (மார்ச்.14 ) தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து, 2025-2026ம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். வேளாண் பட்ஜெட்டை தொடர்ந்து அமைச்சர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் பச்சை துண்டோடு சட்டப்பேரவையில் அமர்ந்துள்ளனர்.
வேளாண் துறையுடன் கால்நடைத்துறை மற்றும் மீன்வளத்துறைக்கான ஒதுக்கீடுகள் மற்றும் அறிவிப்புகளை வெளியிடுகிறார்.
முன்னதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி ஆகியோர் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Read more :தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்.. விவசாயிகள் கோரிக்கை... மிகுந்த எதிர்பார்ப்பு
What's Your Reaction?






